பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

எங்கே இருக்கிறார் அந்த அறிவானந்தர்? என்றா தம்பி! கேட்கிறாய்? எங்கும் இருக்கிறார்! இந்நாட்டு உழைப்பாளியைத்தான் சொல்கிறேன்.

அவரிடம் பேசிப் பாரேன்! ஆதரவும் புரியும்! நல்வாழ்த்தும் கிடைத்திடும்.

அதனைப் பெற்றிடுவதிலே மட்டும், தம்பி! நீ வெற்றி பெற்றுவிட்டால், பிறகு உன் ஆட்சி அமைவதைத் தடுத்திடும் வல்லமை எவருக்கும் இருக்கப் போவதில்லை.

அவர், ஏழை; உழைப்பாளி; கவலை நிரம்பியவர்! ஆனால் தம்பி! மறந்துவிடாதே! அவர் இந்நாட்டு மன்னர்!

அவர் ‘கோலம்’ பளபளப்பு அற்றது! குரல் வலிவற்றது! ஆனால், அரசுகளை ஆக்கவும் அழிக்கவும் தேவைப்படும் ஆயுதம் அவரிடம் இருக்கிறது! ஓட்டுச் சீட்டு!!


18-9-66

அண்ணன்,
அண்ணாதுரை