பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

எழுப்பினாலும் விம்மும் மக்கள் கட்டிக் காத்துவரும் எதிர்க்கட்சியினை ஒழித்திடுவது முடியாத காரியம்.

இதனைக் காமராஜர் அறியாமல் இருக்கமுடியுமா? அறிவார்!! ஆனால், அவரை நம்பிக்கொண்டு, ஆனால், கழக வளர்ச்சி கண்டு நடுங்கிக் கொண்டுள்ள ‘கனதனவான்களு’ க்குத் தெம்பு தர, தைரியம் ஊட்ட மரண அடி கொடுக்கிறேன்!—என்று பேசுகிறார், பேசட்டும்.


25-9-'66

அண்ணன்,
அண்ணாதுரை