பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிக் கடிதம்: 82

போஜராஜனும் காமராஜரும்


★ சிட்டுகள் வல்லூற்றை எதிர்க்கும் காலம்!
★ காமராசர் நுனியில் இருந்து கொண்டு அடிமரத்தை வெட்ட முனைகிறார்!
★ ஜனநாயக சோஷியலிசம் பேசும் காமராசர் தங்குவது மாளிகையில்!
  குலவுவது சீமான்களுடன்!
★ தர்மகர்த்தா தத்துவம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது!
★ இன்றைய சீமான்கள் நேற்றைய தர்மகர்த்தாக்களே!
★ மகாத்மாவால் முடியாததையா காமராசர் தந்திடப் போகிறார்?
★ திரூடர்களை ‘நள்ளிரவு உழைப்பாளர்’ எனலாமா?
★ இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் இறைவன் தொடர்பு வைக்கவில்லையே!

தம்பி!

“நானோ என் மனைவியோ ஒரு குற்றமும் செய்யாத போது என் தாயாருக்குக் கோபம் வருகிறது.

நானோ என் தாயாரோ ஒரு தவறும் செய்யாத போது என் மனைவிக்குக் கோபம் வருகிறது.