10
மாக இருக்கிறது—ஊரார் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள் நம்மை விரட்ட என்று கிலிகொண்டு, அவர்கள் பிடரியில் கால்பட எடுக்க வேண்டும் ஓட்டம்—அதற்கு உதவக்கூடிய போஸ்டர், வாங்குங்கள் ஒட்டுங்கள்!
ஆயிரம் ஐந்தே ரூபாய்! கருப்பு மையில் அச்சிடப்பட்டது, கண்கவரும் வனப்புள்ளது.
நாலரை அல்லது ஐந்து அங்குல அகலம் இருக்கும்—பதினெட்டு அங்குல நீளம்!
புரட்சிகரமான தோற்றம் தேடுவோர், சிகப்பு மையில் அச்சிடப்பட்ட போஸ்டர்களை வாங்கலாம்—விலை சிறிதளவுதான் கூடுதல்—ஆயிரம் 7-ரூபாய்தான்!
காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்—என்ற இந்த அறிவுரைத் தாட்களை அனைவரும் ஆயிரக் கணக்கிலே வாங்கி, ஊரெங்கும் ஒட்டி, திராவிட நாட்டுக்கு ஆபத்து வராதிருக்க நம்மாலான நல்ல தொண்டு செய்தோம் என்ற மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுங்கள். இந்தச் சிறு காரியத்தைக்கூடச் செய்யத் தவறுபவர்களை, நாம் எப்படித் திராவிட மக்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?
இழி ஜாதி மக்கள், ஈனப் பிறவிகள், காலித்தனத்தால் கூலித்தனத்தால் வயிறு கழுவும் வக்கற்ற மக்கள், என்று உலகு நாளைக்குக் கூறும். எனவே போஸ்டர் வாங்குங்கள், பொன்னான வாய்ப்பு, புனிதமான கடமை, பொறுப்பு உணர்ந்தோர் செய்து தீரவேண்டிய தொண்டு—காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள்—என்ற போஸ்டர்களை வாங்கி எங்கும் ஒட்டிவைப்பதுதான்.
என்ன அண்ணா! இது! காங்கிரஸ் ஒழிப்புக்கான போஸ்டர் வெளியிடுகிறோம், விலை கொடுத்து வாங்கி ஊரெல்லாம் ஒட்டு என்றால் ஒட்டுகிறோம்—அதற்காக, வாங்காதவர்கள், ஈனப் பிறவிகள்—இழி ஜென்மங்கள் என்றெல்லாம் சுடுமொழி கூறுகிறாயே, இதென்ன; என்றைக்குமில்லாத முறையில் இருக்கிறதே என்று சிறிதளவு கோபத்துடன் கேட்க எண்ணுகிறாய் அல்லவா? தம்பி! சுடுசொல் கூறுபவனா நான்—உன்னையா நான் சுடுமொழியால் தாக்குவேன்? என் மொழியும் அவ்விதம் இராது—என் வழியும் அது அல்லவே! விஷயத்தைச் சொன்ன பிறகல்லவா உனக்கு உண்மை துலங்கும், கேள்.
சென்ற பொதுத்தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி எப்படியும் ஒழிக்கப்பட்டாகவேண்டும்; அதிலே ஒரு சில