பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

மாக’ வடநாட்டுப் போக்கைக் கண்டித்துப் பேசுகிறார், எழுதுகிறார்.

இதென்ன பைத்யக்காரப் போக்கு!

இந்த அநீறிதையை நான் அனுமதியேன்;

சர்வாதிகார வெறி கூடாது.

மனம் பதறுகிறது—மானமும் போகிறது.

என்றெல்லாம், ‘காரசாரமாக’ப் பேசுகிறார். அறிக்கைமேல் அறிக்கை விடுகிறார்!

பெரியார்

பி. டி. ராஜன்

ராஜா சர்.

ம. பொ. சி.

சேதுப்பிள்ளை

டாக்டர் மு. வ.

இராமசாமி சாஸ்திரியார்

கிருஷ்ணசாமி ஐயர்

வடபாதிமங்கலம்

திருச்சி விசுவநாதன்

நாவலர் நெடுஞ்செழியன்

போன்ற தலைவர்களை எல்லாம், தமிழ் வளர்ச்சியில் பேரார்வம் காட்டும் அன்பர் சுப்பைய்யா அவர்களின் ‘தமிழகம்’ எனும் இல்லத்தில் கூட்டிவைத்துப் பேசி, அனைவரிடமும், ‘இந்தியை அரசாங்க பாஷை’ ஆக்கும் போக்கைக் கைவிட்டு விடவேண்டும், மாகாணத்துக்கு மாகாணம் தொடர்பு வைத்துக்கொள்ளவும், மாகாணத்துக்கும் மத்திய சர்க்காருக்கும் தொடர்பு வைத்துக்கொள்ளவும் ஆங்கிலம்தான் தகுதியானது, வசதியானது, என்ற அறிக்கையில் கையொப்பமிடச் செய்தார். நானும் உடனிருந்தேன்.

இவ்வளவு செய்தவர் யார்? கட்டாய இந்தியை முதல்அமைச்சராக இருந்தபோது புகுத்திய ஆச்சாரியார்!!

கட்டாய இந்தியைப் புகுத்தி, அதை எதிர்த்ததற்காகப் பெரியாரைப் பெல்லாரிச் சிறையில் வாட்டியவரும் அவரே!