பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தடவை கூறும்போது, முன்பு எவ்வளவோ மேல் என்று சொல்லத்தக்க விதமாகத்தான் இப்போதைய ஆட்சி அலங்கோலம் இருக்கிறது.

மக்களின் ‘வாழ்வு’ முன்பு இருந்ததைவிட, இப்போது மோசமாகி இருக்கிறது.

தொழில் வளம்—தென்னாட்டைப் பொறுத்தமட்டில், இந்த ஐந்தாண்டுகளில் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையவில்லை.

இதனைச் சிற்சில சமயங்களில் காங்கிரஸ் அமைச்சர்களே கூறி அழுகிறார்கள்.

இவை எதனையும் மறுத்திடவுமில்லை. ஆனாலும், காமராஜர் நல்லவர், அவர் மறுபடியும் ஆட்சிபுரிய வேண்டும், ஆகவே அவருடைய வெற்றிக்காகத்தான் வேலை செய்யப் போகிறோம். அவர் வெற்றிபெறுவது, தமிழர்களுக்கு ஒரு ‘வரப்பிரசாதம்’ என்று எண்ணுகிறோம் என்பதாகக் கூறுகிறார்களே, இவர்களேதான் ஆயிரம் ஐந்து ரூபாய் என்று போஸ்டர் போட்டு நாட்டவருக்குக் கொடுத்தார்கள்.

இப்போது ஒரு சமயம், காங்கிரசை மறவாதீர்கள்! ஓட்டுகளைக் குவியுங்கள்! என்று போஸ்டர் போடவேண்டிய நிலைமை வருகிறதோ, அல்லது.

நாடு வாழ மாடு வேண்டும்
மக்கள் ஓட்டு மாட்டுப் பெட்டிக்கே!
காளைமாட்டுப் பெட்டி
காமராஜர் வைக்கும் பெட்டி

என்று விதவிதமான போஸ்டர்கள், பச்சை, நீலம், ஊதா கலர்களில் வெளியிட்டு விற்பனைக்குத் தரப்படுமோ என்னமோ, யார் கண்டார்கள்!

இல்லை, அண்ணா! அப்படி எல்லாம் போடமாட்டார்கள், கூச்சமாக இருக்குமல்லவா, வேண்டுமானால், நம்மீது உள்ள வெறுப்பைக் காட்டுகிற முறையில்.

கண்ணீர்த் துளிக்கு வேட்டு
காமராஜருக்கே ஒட்டு

என்று வெளியிடக்கூடும்—அல்லது இன்னமும் இழிமொழி அழகுடன் வெளியிடக்கூடும் என்று கூறுவாய்; எவ்விதமான