பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அறிவு எனும் பல்வேறு ஆதாரங்களைத் துணைகொண்டதாகும்.

ஆனால், அதனைக் கூறுகிற நாம், தம்பி, சாமான்யர்கள்! ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை!!

எனவே தம்பி, புதிய தமிழகம் அமைகிறது—அதிலே நமது நம்பிக்கையும் மலர்கிறது. மொழிவழி அரசு—திராவிடக் கூட்டாட்சிக்குத்தான் வழிகோலும் என்பது, நமது திடமான நம்பிக்கை.

அந்த நம்பிக்கையுடனேயே நாம், புதிய தமிழக அமைப்பை, விழாவாகக் கொண்டாடுகிறோம்.

தீபாவளியுடன் அந்தத் திருநாள் இணைந்துவிட்டது—எனவே, திராவிட முன்னேற்றக் கழகம், இந்த விழாக்கொண்டாடி, இதிலிருந்து பெறக் கிடைக்கும் கருத்துகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற, வேறோர் நாளைக் குறித்திட வேண்டும் என்று, உன் சார்பிலும் என் சார்பிலும், நமது பொதுச் செயலாளரை நான் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!!


4—11—1956

அன்பன்,
அண்ணாதுரை