13
முறையைக் கையாண்டாலும், தம்பி நாடும் நாமும், காங்கிரஸ் குறித்து, பெரியார் கொண்டுள்ள கருத்து என்ன என்பதை எப்படி மறந்து விடமுடியும்.
அவர் என்ன, பட்டும்படாததுமாகவா, கூறியிருக்கிறார்.
பொறி பறக்கப்பறக்கப் பேசி இருக்கிறார்—பசுமரத்தாணி போலல்லவா பதிந்திருக்கிறது.
நான் கூடச் சில வேளைகளில், ஏன் வீணான தொல்லை, சஞ்சலம், சங்கடம், சிக்கல்—காங்கிரசே வந்து தொலைந்து போகட்டுமே, நமக்கென்னவென்று இருந்து விடுவோமே, நாம் எதற்கு வம்புதனை விலைகொடுத்து வாங்குவதுபோல, தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று இடர்ப்படவேண்டும், என்று சலிப்புடன் எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால் அடுத்த கணமே அவருடைய உருவம் தோன்றும் மனக்கண்முன்பு, “அடே அறிவிலி! எவ்வளவு இடித்திடித்துக் கூறினேன்—எத்துணை அருமையான காரணம் காட்டினேன், காங்கிரஸ், ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று; இவ்வளவும் கேட்டுவிட்டு, இனியும் இளித்தவாயனாவதா? காங்கிரசை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எவ்வளவு தந்தேன்—எங்கே போயிற்று அந்த ஆற்றல்! விழலுக்கு இறைத்த நீராயிற்றா என் அறிவுரை விளக்கம்!” என்று கேட்டுக் கேலிசெய்கிறதே, என் செய்வேன்? இதோ கேளேன், தம்பி, ஒரு விளக்கம்—அவர் அருளியது:
என்னென்ன இன்ப அலைகள் நெஞ்சில் கிளம்புகிறது, இந்த அரசியல் லிளக்கம் கேட்கும்போது.
இதைவிட ‘வெற்றி’ வேறு என்ன காணமுடியும்?
இந்த இன்ப நாள் காணக் காங்கிரஸ் ஒழியவேண்டும், என்கிறார்—காங்கிரஸ் ஒழிந்த ஒரே வருடத்திலே, இந்த இன்பநிலை ஏற்படும் என்று கூறுகிறார்.
இதை எண்ணத்தில் பதிய வைத்துக் கொண்டானபிறகு, காங்கிரசை எதிர்க்காமலிருக்க முடிகிறதோ!! உன்னாலும்