பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வேண்டியது நமது கடமை. இதை மறந்து யாராவது ஒரு ஓட்டுக்கூட போடுவார்களானால் அது இந்த நாட்டுக்குச் செய்த துரோகம் மாத்திரமல்ல. திராவிட மக்களுக்குச் செய்கிற துரோகம் மாத்திரமல்ல, ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தன் தகப்பன் தாய், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு”

இவ்வளவு கடுமையாக அவர் எச்சரித்திருக்கும்போது, காமராஜர் நல்லவர் என்று ஒரு காரணம் காட்டி, காங்கிரசை எதிர்க்காமலிருக்கவேண்டும் என்று எப்படித் தம்பி, நான் உனக்குக் கூறமுடியும்—நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?

நாட்டு மக்களிலே, பொதுநல நோக்கமற்றோர் சிலர், காங்கிரசைச் சுயநலம் கருதி ஆதரித்து மீண்டும் காங்கிரசாட்சி ஏற்படவழி செய்து விடுவார்களோ என்ற கவலை கலக்கும் நிலையில், பெரியார், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது நாட்டுக்கு எத்துணை பெரிய நாசம் என்பதை எடுத்துரைத்திருக்கிறார்—தம்பி—கேட்டால் நடுக்கம் பிறக்கும் உனக்கு—காங்கிரசாட்சியை எதிர்த்திட கல்லுருவும் உயிர்பெற்று எழத்துணியும் என்றுகூட, கற்பனை அலங்காரத்துடன் பேசுவாய்.

“நம்மைப் பொறுத்தமட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆதிக்கத்திற்கு வருவதைவிட, உலகப் போர் வந்து, இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் அணுகுண்டுக்கு இரையாகி மடிவதே சிறந்த முடிவு என்போம். சித்திரவதையைக் காட்டிலும், திடீர் மரணம் மேலானதல்லவா?”

சித்திரவதை!—காங்கிரசாட்சி மீண்டும் ஏற்படுவது, மரணத்தினும் கொடியது என்றாலும், அவர் எம்மிடம் சிரித்துப் பேசுகிறார், ஆகவே, இந்தத் தடவை சித்திரவதையைச் சகித்துக் கொள்ளும்படி செந்தமிழ் நாட்டவருக்குக் கூறுவோம் வாரீர் என்று நாட்டு மக்களை அழைத்திட என்னால் எப்படித் தம்பி முடியும்! அவர்கள் அழைக்கிறார்கள்!

நான், முன்பு பெரியார் காங்கிரஸ் குறித்துச் சொன்னதை மறவாமலிருக்கின்றேன்—மாற மறுக்கிறேன்.

"காங்கிரஸ்காரர்கள் ஆளத் தகுதியற்றவர்கள்; அவர்களுக்கு நிர்வாகத் திறமையில்லை.

காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காந்தியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கதர் வேஷம் போட்டுக்கொண்டு ஏமாற்றுகிறவர்கள், ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு—மக்கள் அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு