பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

பாட்டும், கூத்தும், கேளிக்கையும் நிறைந்த விழா—ஒவ்வோர் பல்கலைக்கழகமும் தத்தமது கோட்டத்தில் வளர்ந்துள்ள கலைத்திறனைக் காட்டிடும் வாய்ப்பு—இதிலே சென்னைப் பல்கலைக்கழகம் கலந்து கொள்ளவில்லை. காரணம் என்ன?

இந்தியப் பேரரசு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்தது. மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டோம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் கூறிவிட்டது.

இந்த விழா, ஆண்டுதோறும் டில்லியிலேயே நடத்துகிறீர்கள்—இது சரியல்ல—ஒவ்வோர் ஆண்டு ஒவ்வோர் ‘ராஜ்ய’த்தில் நடத்துவதுதான் நல்லது என்று சென்னைப் பல்கலைக்கழகம் கூறிற்று இந்தச் சாதாரணமான நியாயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள டில்லிக்கு விருப்பம் இல்லை.

டில்லி ஒரு திட்டம் வகுப்பது, அதை முறையில்லை, சரியில்லை என்று கூறி, சென்னை மறுப்பதா!

நந்தா! உனக்கேன் இந்தப் புத்தி!

டில்லியின் போக்கு இதுபோலிருந்திருக்கவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் யோசனையைப் புறக்கணித்தது.

புண்பட்ட மனம்; சென்னைப் பல்கலைக்கழகம், இதனைக் காட்டவும், தன் கண்டனத்தைத் தெரிவிக்கவும் டில்லி விழாவில் கலந்துகொள்ளவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல பாடங்கள் போதிக்கப்படுகின்றன, ஆனால் திராவிட நாடு திராவிடருக்கே என்பது பாடமாக்கப்பட்டதில்லை! சென்னைப் பல்கலைக்கழகம் கேட்டதெல்லாம் ‘விநயமான கோரிக்கை’—அதற்கே டில்லி இணங்கவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகம் என்ன செய்யும்? என்ன செய்தார் டாக்டர் மு. வ! கலைத்தூதுக்குழு சம்பந்தமாக டில்லி காட்டும் போக்கைக் கண்டு மனம் வெதும்பி—மிரட்டல்—விரட்டல் என்று கூறினார். சென்னை பல்கலைக்கழகம், விழாவில் கலந்துகொள்ளாது ஒதுங்கி நின்றது! அவ்வளவுதான்!!

சென்னைப் பல்கலைக்கழகம் இதுபோல் நடந்து கொண்ட காரணம் என்ன என்பதுகூடப் பொதுமக்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்பட்டாலும், மற்றத்துறையினர் இது குறித்து அக்கரை காட்டி, இது டில்லி