16
பதவி வேட்டை ஆடுகிறவர்கள், மக்களுடைய கருத்தை அலட்சியம் பண்ணிவிட்டுத் தங்களுடைய விருப்பப்படி அதிகாரம் செலுத்த ஆசைப்படும் எதேச்சாதிகார வெறியர்கள்”
அந்த வெறியர்களிலே வேண்டியவர்கள்—வேண்டாதவர்கள் என்று பாகுபாடு என்ன தேவைப்படுகிறது. பெரியாரின் ‘பாஷை’யில் கேட்கிறேன், எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
காமராஜர் நல்லவர், என்கிறார்கள்—எனக்குப் பெரியார் பேசும் அந்தப் பழமொழி நினைவிற்கு வருகிறது.
நேருவுக்கு வலது கரம், பார்ப்பனப் பாதுகாவலர், முதலாளிக்கு இரும்புத்தூண், அடிதடியாட்சிக் கர்த்தா, கொலைபாதக ஆட்சிக்கு உடந்தையானவர்.
இவை, காமராஜருக்கு விடுதலை சூட்டிய பட்டங்கள்.
முன்பு தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் நின்று காமராஜர் வெற்றி பெற்றார்—அப்போது அவர் தோற்க வேண்டும் என்பதற்காகப் பட்டபாடு வீணானது கண்டு, மனம் வெதும்பி “எப்படிப்பட்ட ‘ஆசாமி’ வெற்றி பெற்றுவிட்டார், ஐயோ! தமிழகமே! உன் கதி இதுவாகவா போகவேண்டும்” என்று கொதித்தெழுந்து கேட்டு, விடுதலை தீட்டிற்று. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரை—அடிதடியாட்சிக்குக் காரணமாயிருந்த தலைவரை—எதிர்க்கட்சிக்காரகளைச் சுட்டுக்கொன்ற கொலைபாதக ஆட்சிக்குக் காரணமாயிருந்த கட்சித் தலைவரை தோற்கடித்து உலகப்புகழ்பெற வேண்டுமென்று கருதியிருந்த தமிழர்கள் ஏமாந்துவிட்டனர்.
“இராவணீயம் தோற்றுவிட்டது; விபீஷணத்தும் வெற்றி பெற்றுவிட்டது.”
தம்பி! இப்போது இந்த விபீஷணத்துவ வெற்றியிலேதான் தமிழரின் நல்வாழ்வே இருக்கிறது என்று எடுத்துக் கூறுகிறார்கள் - நியாயந்தானா?
விபீஷணன், இராவணனாகி விடவுமில்லை; விபீஷணன் இராவணன் ஆகியோர்பற்றி கொண்டுள்ள கருத்தும் மாற்றிக் கொள்ளப்படவில்லை; ஆனால் திருவில்லிபுத்தூரில் வெற்றி பெற்ற காமராஜர், விபீஷணர்; இன்று அவர் தமிழர் தலைவர்! ஏன்? ஏன்?
திருவல்லிபுத்தூரில் வெற்றி பெறுவதற்காகக் காமராஜர் ஊரூர் சுற்றி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது. அவர்