பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

தம்பி! வடக்கு வளருகிறது தெற்கு தேய்கிறது என்று நாம், கூறும்போது, அலங்காரப் பேச்சு அடுக்குமொழி என்று கேலி பேசினரே, அவர்கள், ராஜா அம்பலப்படுத்தியிருக்கும் உண்மையைக் கண்ட பிறகேனும், சிந்திப்பார்களா என்று கேட்டுப்பார்.

அவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ, குமாரசாமிராஜா அவர்கள் நிரம்பச் சிந்தித்திருக்கிறார் என்பதும், செயல்படக் கூட விரும்புகிறார் என்பதும் விளங்கும் வகையில், மேலும் சில உண்மைகளை அவர் கூறுகிறார்.

1. மத்ய சர்க்கார் அனாவசியமாக மாகாண சர்க்காரின் அலுவலில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது.

மத்ய சர்க்கார் ஆதிக்கம் செய்கிறது, மாகாண சர்க்காருக்கு முழு உரிமை கிடையாது என்று நாம் பேசும்போது, முகம் சுளித்துக் கொள்கிறார்களே காங்கிரசார், அவர்கள் இந்தக் ‘குற்றச்சாட்டு’ ஒரு கவர்னர் மூலம் பதிவு செய்யப்படுவது கண்டு ஆச்சரியத்தால் வாய் பிளந்து நிற்பார்கள் என்று எண்ணுகிறேன். எவ்வளவு திறமையாக, அப்பழுக்கற்ற முறையில் மாகாண சர்க்கார் ஒரு திட்டம் தயாரித்தாலும், தங்கள் அதிகாரமும் அமுலும் இருக்க வேண்டும் என்பதற்காகவென்றே, மத்ய சர்க்கார், அதிலே அங்கொரு மாற்றமும் இங்கொரு மாற்றமும் செய்து, திட்டத்தைத் திருத்துகிறது என்று கூறுகிறார், ஒரிசாவில் கவர்னராக வேலைபார்க்கும் ராஜா.

கூறினதுடன் அவர் அமைதி கொள்ளவில்லை; மத்ய சர்க்கார் இனியும் இந்தப் போக்கிலே இருக்கக் கூடாது என்று புத்திமதி கூறலாமா என்றுகூட அவர் எண்ணிக் கொள்ளவில்லை.

புத்திமதி கூறும் கட்டம்போய் விட்டது; பிறர் கூறும் அறிவுரையைக் கேட்கும் நிலையிலும் மத்ய சார்க்கார் இல்லை என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. எனவே குமாரசாமிராஜா, போர்க்கொடி உயர்த்துவது போலவே பேசுகிறார்.

2. மேலிடத்தவரின் குறுக்கீடுகளை நாம் எதிர்த்துப் போராட வேண்டிய காலம் விரைந்து வருகிறது.

என்று கூறியிருக்கிறார்.

தம்பி! பொறுமை உணர்ச்சியும் பொதுப் பிரச்சினைகளிலே அக்கரையும் கொண்ட காங்கிரஸ் நண்பர் யாராவது உனக்குத் தெரிந்திருந்தால், அவரை, குமாரசாமிராஜாவின் பேச்சிலே பொதிந்து கிடக்கும் உண்மைகளைப்பற்றி விளக்-