40
கும்படி கேள்; கேட்டுக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தால் நீ விளக்கிக் காட்டு.
வடக்குவேறு
தெற்குவேறு
வடக்கு வஞ்சனையுடன் நடந்துவருகிறது.
வடக்கே, பணம் விரயமாகிறது.
தெற்கு ராஜ்ய அலுவலில் வடக்கு, அனாவசியமாகக் குறுக்கிடுகிறது.
வடக்கு குறுக்கிடும் போக்கை, தெற்கு எதிர்த்துப் போரிடவேண்டும்.
அந்தக் காலம் விரைவில் வருகிறது.இவ்வளவும், சுரங்கத்துள் தூங்கும் தங்கம் போலவோ, கடலுக்குள் உறங்கும் முத்துபோலவோ கூட அல்ல, தோலுக்குள் இருக்கும் சுளை போலவோ, நெல்லுக்குள் இருக்கும் அரிசி போலவோ, இருக்கிறதா இல்லையா என்று கேட்டுப்பார்.
குமாரசாமிராஜா இந்த அளவு எடுத்துக் கூறியது எனக்கென்னமோ, கை சுளுக்குடன் கஷ்டப்படும் கந்தப்பனுக்கு வலி போக்கிக் கொள்ளக் கிடைக்கும் பச்சிலைத் தைலம் போலத் தோன்றுகிறது. இதுவாவது கிடைக்கிறதே என்று மகிழக்கூடத் தோன்றுகிறது.
கவர்னர் பதவியிலிருந்து விலகியதும், இது குறித்து, மேலும் பல உண்மைகளை, விஷயங்களை நான் கூறுகிறேன்—என்று குமாரசாமி ராஜா கூறுகிறார்.
இதற்குள், தூதும், சமரசப் பேச்சும், ஆகாது கூடாது, அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள், இவர்கள் ஏளனம் செய்வார்கள் என்றெல்லாம் எடுத்துக் கூறும் பாசவலையும் வீசப்பட்டிருக்கும்.
அத்தனைக்கும் தப்பி வந்து, ஆற்றலுடன், குமாரசாமிராஜா அவர்கள், வடக்கு கொண்டுள்ள கோலத்யுைம் போக்கினையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, வடக்கு செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்து, ஏன் என்று கேட்கும் வீரத் தலைவராக வெளிவர வேண்டும்.