இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41
முடிகிறதோ இல்லையோ, இப்போதைக்கு இந்த அளவுக்கேனும் அஞ்சா நெஞ்சுடன் உண்மையை எடுத்துரைத்த நேர்மையைப் பாராட்டத்தானே வேண்டும்.
செந்திலாண்டவன் கோயிலில் சந்தனம் அறைத்திடும் கந்தப்பனுக்கு, கை சுளுக்குப் போக, எருக்கம் பாலும் களிமண் பூச்சும் மட்டுமல்ல, பச்சிலைத் தைலமும் சிறிதளவு கிடைக்கிறதென்றால், கொஞ்சம் நிம்மதிதானே!
அந்தவிதமான மகிழ்ச்சி நமக்கு, ராஜாவின் பேச்சு கேட்டதில். வாழ்க அவர்தம் வாய்மைப் பற்று, வாழ்க அவர்தம் அஞ்சாமை என்று நீயும் நானும் வாழ்த்துவோம், தம்பி! வேறு என்ன இருக்கிறது நம்மிடம், அவருக்கு அளித்திட.
9–9–1956
அன்பன்,
அண்ணாதுரை
அ. க 4 - 3