பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 65

ஆனால்......ஆகவே......!

தமிழர் பிரச்சினையும் காமராஜரின்
போக்கும் — அடக்குமுறையும்

தம்பி!

ஆனால்... ஆகவே... எளிதாகப் பொருள் விளங்கி விடுகிறது என்று எவரும் கருதிக்கொண்டுள்ளனர்; அன்றாட உரையாடலிலிருந்து பாராளுமன்றப் பேச்சுவரையில் மிகத் தாராளமாகப் பயன்படுத்துகின்றனர், இந்த இரு சொற்களை. ஆனால்......? பார்த்தாயா, தம்பி, நாலு வரி முடிவதற்குள் இந்த ஆனால் எனும் சொல் வந்து தொலைக்கிறது. ஆகவே இதிலிருந்து என்ன புரிகிறது?...... மீண்டும், பார், தம்பி. ஆனால் எனும் சொல்போலவே, ஆகவே என்ற சொல்லையும் அழைத்துக் கொண்டேன். அந்த அளவுக்கு எவருடைய பேச்சிலும் எழுத்திலும், தோழமை கொண்டாடிக்கொண்டு, ஆனால், ஆகவே எனும் இந்த இரு சொற்களும் இடம்பெற்றுவிடுகின்றன.

பேச்சிலும் எழுத்திலும் தோழமை கொண்டாடி இடம்பெற்றுள்ள இந்த இரு சொற்களும், தம்பி, காண்பதற்கு மிக எளிதாகப் பொருள் தரத்தக்கன போல் இருக்கும். ஆனால், இந்தச் சொற்களிலே புதைந்து நிற்கும் பொருளை விளக்கிக் கொள்வது உண்மையில் எளிதல்ல.

அணு என்ற உடன், ஓஹோ! அணுவா? என்று எப்படி எவரும் மிகமிகச் சாதாரணமாகக் கூறிவிடுவதன் மூலம்,