பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

உதை உதை என்று உதைத்தனர்.

இல்லை என்று சொல்லவில்லை — இது இழுக்கு என்று பேசும் பெரியாரோடு நாம் இன்று இல்லை.

உதைப்பான்; பட்டுக்கொள்.

அடிப்பான்; பொறுத்துக்கொள்.

சுடுவான்; தாங்கிக்கொள்.

பத்துபேர் செத்தாலும் கவலைப்படாதே.

செத்தவர் போக மிச்சம் இருப்பவர், மானத்தோடு வாழட்டும்.

இப்படிப் போதித்த பெரியாருடன் நாம் இருந்தோம்.

அடக்குமுறை, வெறிக்கோலத்தில் துரத்தியபோது, நம் தோழர்கள் கலங்காது நின்றபோது, மனக் கண்ணால் அந்தப் பெரியாரைத்தான் கண்டனர்.

அடிபட்டோம், உதைபட்டோம், என்று கூறிக் கொள்வதிலே, வெட்கமில்லை, பெருமிதத்தோடு கூறுகிறோம்; தாயக விடுதலைக்காக இந்த அளவுக்காவது துணிவு பெற முடிந்ததே என்று மகிழ்ச்சியோடு கூறுகிறோம்; பெரியார் நம்மோடு இல்லாதிருக்கும் இந்நிலையில், அடக்கு முறை கண்டு அஞ்ச நேரிட்டுவிடுமோ என்று ஐயம் கொண்டிருந்த நாம், இல்லை, அவர் இன்று நம்மோடு இல்லாமற் போகலாம், அவர் ஊட்டிய ஆர்வமும் நம்மை விட்டுப் போய்விடவில்லை.

உதைக்கிறீர்களா? பட்டுக் கொள்கிறோம்.

சுடுகிறீர்களா? தாயகத்தின் தளை உடைத்திடும் பணிக்கு இன்னுயிர் தருகிறோம் என்று கூறினோம்.

இது, என்றென்றும், எண்ணுந்தொறும் நெஞ்சினை நெகிழச் செய்திடும் சம்பவம்.

இது கேலிக்கும் உதவும் என்று யார் எண்ணியிருப்பார்; ஆனால் — ஆகவே எனும் பொல்லாத சொற்களின் போக்கினாலே தம்பி, எது கண்டு எவரும் பாராட்டுவரோ அதே கஷ்ட நஷ்டம் ஏற்ற சம்பவத்தையே, பெரியார், கேலிபேசப் பயன்படுத்திக்கொள்ளும், விசித்திரம் ஏற்படுகிறது.

தம்பி, பெரியாராவது, தம்மோடு இருந்தால் கிளர்ச்சி செய்யலாம், சர்க்கார் ‘கிச்சுகிச்சு’ மூட்டுவரேயன்றி கொட்ட மாட்டார்கள், தட்ட மாட்டார்கள் என்று ஆசைகாட்டி,