54
“இந்த நாட்டை இன்றைய தினம் ஆளுகிறவர்கள் வடநாட்டார்கள்; பணியாக்கள், மார்வாடிகள் குஜராத்திகள்தானே! அவர்கள் இத்த நாட்டை ஆளுவதற்கு உள் உளவாய் இருந்துகொண்டு இருப்பவர்கள் நம நாட்டுப் பார்ப்பனர்கள்; அவர்களுக்குக் கூலியாயிருப்பவர்கள்,
திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சில விபீஷணர்களும்,
அனுமார்களும் ஆவார்கள்.”பெரியார் பேருரையில் ஓர் பகுதி இது.
ஆகவே, விபீஷணர்களையும் அனுமார்களையும் தேர்தலில் ஆதரிக்கக்கூடாது. இந்நாட்டு காமராஜர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்தான், உள் உளவு ஆட்கள்—என்று கூறத் தோன்றும் உனக்கு.
ஆகவே போட்டால் இந்தக் கருத்துத்தான் பிறக்கும்.
ஆகவே, ஆகவே போடாமல் ஆனால் போட்டு, காமராஜர் காங்கிரஸ்காரர்தான், அந்த முறையில் வடநாட்டுக்குக் கங்காணிதான், ஆனால் அவர் நல்லவர், நம்மவர், ஆகவே அவரை ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம், அவர் ஒண்டிக்கட்டையாக வெற்றிபெற்றால் பலன் இல்லை, ஆகவே காங்கிரஸ் மெஜாரடியாக வெற்றிபெறப் பாடுபட்டுத் தீரவேண்டும். ஆனால் காங்கிரஸ் நல்ல ஸ்தாபனம் என்று எண்ணிவிடாதீர்கள், அது முதலாளி முகாம், பார்ப்பனப் பாதுகாப்புச்சபை, வடநாட்டுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கங்காணி ஸ்தாபனம்—என்று எடுத்துரைக்கப்படுகிறது.
இந்த அரசியல் தனி ரகமாக இருக்கிறதே என்பதற்காக அல்ல இதனைக் கூறுவது, இந்தக் கருத்தோவியத்தில், ஆனால்—ஆகவே என்ற சொற்கள் அரசியல் போக்கையே, தம் இஷ்டப்படி ஆட்டிப்படைக்கும் வேடிக்கையைக் கவனித்துக் களிப்புறுவதற்குத்தான்.
அண்ணா! உன் நோக்கம் இந்த இரு சொற்கள் நடத்தும் சிலம்ப வேலையின் வேடிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருப்பினும், இடையிடையே வரும் அரசியல் பிரச்சினைகளை அடியோடு எப்படி ஒதுக்கிவிடமுடியும்—ஆகவே ஒரு கேள்வி கேட்கிறேன்—காங்கிரஸ் கெட்டதுதான், காமராஜர் போன்றவர்கள் வடநாட்டு ஆதிக்க வளர்ச்சிக்கு உடந்தைதான், ஆனால் காங்கிரசை இதற்காக ஒழிப்பது என்று நாம் முயற்சிக்கும்போது, அதனைச் சாக்காகக்கொண்டு சந்து