பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

கிடைத்ததும் பொந்து ஆக்கிக்கொள்ளும் நச்சுகள் இடம்பெற்றுவிட்டால் என்ன செய்வது சொல்லு கேட்போம்—என்று கேட்கத் தோன்றும், தம்பி.

பெரியார் இதை எண்ணிப் பார்க்காமலில்லை! இதுபற்றி அவர் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தான் பிறகு, சொல்லுகிறார்—சொல்லி இருக்கிறார்......

“காங்கிரசை ஒழிப்பதற்கு முதல் வேலை காங்கிரஸ் எதிரிகளுக்கு வெற்றி உண்டாக்குவதேயாகும். உண்மை எதிரி கிடைக்காத இடத்தில் எதிரி வெற்றிபெறமாட்டார் என்று கண்ட இடத்தில், வசதிபோலப் பார்த்து யாருக்கு ஓட்டுப் போட்டால், காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதாகக் காணக் கிடைக்கிறதோ அந்தப் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். வேறு அபேட்சகர் இல்லை என்றோ, வெற்றி பெறமாட்டார் என்றோ கண்ட இடத்தில், பார்ப்பனருக்கு ஓட்டுப் போட்டால்தான் காங்கிரஸ் அபேட்சகர் தோல்வியுறுவார் என்று கண்டால், பார்ப்பனருக்கு ஆவது ஓட்டு செய்து காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டியது அறிவுடமையாகும். கங்காணிகள்—துரோகிகள்—உண்மைச் சூத்திரர்கள் பேச்சைக்கேட்டு எந்தக் காரணத்தைக்கொண்டும் காங்கிரஸ் கங்காணிப் பெட்டியில் ஓட்டு விழும்படி நடந்துகொள்ளாதீர்கள். எப்படியாவது காங்கிரஸ் அழியவேண்டும், ஒழியவேண்டும். ஏன் என்றால் அது நம் நாட்டுப் பார்ப்பனர்போல் தேவை இல்லாத ஸ்தாபனம்—கேடான கேட்டை விளைவிக்கும் உள்மாந்தை போன்ற ஸ்தாபனம் என்பதே நமது முடிவு.”

தம்பி! இன்னும் என்ன விளக்கம் வேண்டும்?

அப்போதைக்கு இப்போதுள்ள நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்தால், சென்ற தேர்தலின்போது, அபேட்சகர்கள் நிறுத்தும் வேலையில் ஆச்சாரியார் ஈடுபடவில்லை, இப்போது டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் அந்தக் காரியத்தைக் கவனிக்கப் போகிறார்!

இந்தக் கட்டம் வந்ததும், மீண்டும் அந்தப் பொல்லாத சொற்கள் வந்துவிடுகின்றன! வளைவும் நெளிவும் தெரிகின்றன.

ஆனால், ஆகவே என்ற சொற்களின் சுவைமிகு காதையை நான் நமக்குச் சாதகமாக்கிக்கொண்ட கோபத்-