103
இல்லையேல், உள்ளே தள்ளிவிடுவோம்!—என்று டில்லி தெரிவித்துவிட்டது.
தம்பி என்ன சொல்கிறாய்?
“என்ன சொன்னார் நேரு பண்டிதர், வெள்ளை ஏகாதிபத்தியம், அவரை மிரட்டியபோது”—என்பதைப் படித்து விட்டுத்தான் இதனை எழுதுகிறேன்.
என்ன செய்தார்கள் விடுதலைகேட்ட, ஜோமோ கெனியாடாவை? எட்டு ஆண்டுகள் சிறை! பிறகு? அந்த எஃகு உள்ளம் என்றும்போல் இருக்கக்கண்டு, நேற்று, விடுதலை! நெய்ரோபி நகரில், பதினாயிரக்கணக்கான ஆப்பிரிக்கர் கூடி, ஆடிப்பாடி வரவேற்றனர். கெனியாடாவை! அதைப் படித்து விட்டு அந்த மகிழ்ச்சியிலே இதனை எழுதினேனில்லை.
ஐயர்லாந்து நாட்டு விடுதலைக்காகப் போராடிய மாவீரன் மடிந்தான்; அவனுடைய புதைகுழிக்கருகே நின்று, மற்ற விடுதலை வீரர் பேசினர். அந்தப் பேச்சைப் படித்துவிட்டு, இதனை எழுதுகிறேன்.
வாய்ச் சொல்லில் வீரரா? கச்சையை வரிந்துகட்டிக் கொண்டு, வருவது ஏற்கத் தயாராக இருக்கும், விடுதலை விரும்பிகளா? என்று நாடு கேட்கிறது! காலம் கேட்கிறது தம்பி! என்ன சொல்கிறாய்?
விடுதலைக் கிளர்ச்சியில் எதிர்பார்க்கவேண்டிய, அடக்கு முறை அவிழ்த்துவிடப்படும் வேளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தம்பி! என்ன சொல்கிறாய்? முதல் பந்தியா! பிறகா! வேண்டவே வேண்டாமா! பதில் சொல்லிடு! மணி அடித்துவிட்டார்கள்!!தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்று பேசுகிறார் கமாராஜர்.
தம்பி தேர்தலின் முடிவு, பார்த்து இலட்சியத்தைப்பற்றிய கருத்தினைக் கொண்டவர்களல்ல. நாம்! தேர்தல், நமக்கு ஏற்பட்டுவிடும் பல வேலைகளிலே ஒன்று!! அது முடியட்டும் என்கிறார் காமராஜர்—என்னைப் பொறுத்தவரையில் தேர்தலுக்கு இரண்டாவது இடம்தான் — முதல் இடம் இலட்சியம் என்ன ஆவது என்பதுதான்! அதனைக் காத்திட, கொடிய அடக்கு முறையையும் தாங்கி நிற்கும் தோழரின்