பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

கடிதம்: 142

பட்டப் பகலில்...! (1)

பட்டப் பகலில் கண்ட கனவு—
காளையும் கன்னியும்—

தம்பி!

இதய மலரே!
இன்பப் பெருக்கே!
முத்தே! முழுநிலவே!
செந்தேனே! என் மானே!

இதுபோலெல்லாம் பண்பாடிடத் தெரியாப் பாவை—கண் உறக்கம் கொண்ட நிலையில் கவிதை தீட்டப்பட்ட மடலெனத் திகழ்கிறாள். தொட்டிலின் ஓரத்தில் ஒரு கரம்—மற்றொன்று தரையில்! அவள் ஏழை! இல்லம் இல்லாமையின் இருப்பிடம்; செல்வம் தொட்டிலில்! அந்தச் செல்வத்தைப் பெற்றுப் பெருமாட்டியாகிட வைத்தவன், கழனி அருகே, காவல் காத்து நிற்கிறான் — களஞ்சியம் போய்ச் சேரவேண்டிய நெல்லை எவரும் களவாடாதிருக்க. அவன் கண்களிலே அறுவடைக்குத் தயாராகி நிற்கும், பயிரா தெரிகிறது! இல்லையே! கதிரின் கனம் தாளமாட்டாமல், சிறிது கீழே தாழ்ந்தபடி பயிர் இருக்கிறது.

Ix.—7