பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

நாட்டிலேயும் சமுதாயத்திலேயும், காணக்கிடக்கும், மூண்டுகிடக்கும், சீர்கேடுகள் நலிவுகள் ஆகியவற்றினைக் கண்டு, மனம் உளையும் நிலைபெற்ற சீலர்கள், அந்தச் சீர்கேடுகள் ஒழிக்கப்பட்டுச் செம்மை ஏற்பட்டு, நாடோ, சமுதாயமோ, நல்ல நிலைமைபெற வேண்டும்; அதற்கு வழிவகை என்ன என்று எண்ணுவர் — பட்டப்பகலிலே தோன்றும் கனவு அது.

அத்தகைய கனவு, பலித்துவிடுகிறது.

கனவு காண்கிறான், கருத்தற்றவன்!—என்று கூறிடுவர், தம்மை நிறை அறிவு பெற்றவரெனக் கருதிக்கொள்ளும், மண்டைக்கனம் பிடித்தோர்.

கனவு காண்கின்றான்—! என்று பலருடைய எண்ணத்தைக் கேலி பேசினர்—நாடு இன்று அத்தகைய கனவு கண்டவர்களின் கனவு நனவாகி நிற்பதைக் கண்ணுற்று!!

கனவுகளின் தன்மையைவிட எத்தகைய விதமாகவெல்லாம் கனவு காண்கின்றனர்; காண இயலும், என்பது குறித்தும், அதனால் கிடைத்த பலன்பற்றியும், அடுத்த கிழமை எழுதுகிறேன்.


3-9-61

அண்ணன்,
அண்ணாதுரை