119
என்னமோ நினைத்தேன்—மறந்துவிட்டேன் என்று பேசுவது கேட்டிருப்பாய். நன்றாகக் கவனப்படுத்திச் சொல்லு — ஒன்றுக்கு மற்றொன்று சொல்லிவிடாதே! நினைவு படுத்திக்கொண்டு சொல்லு—என்று மற்றவர்கள் கூறுவதும் கேட்டிருப்பாய்.
நேற்று நடந்தது. இன்று அவனுக்கு நினைவிலிருக்காதே! அவ்வளவு தெளிவு!! — என்றும்,
அவனுக்கு அதெல்லாமா நினைவிலே இருக்கும்—பெரிய ஆள் அல்லவா— எத்தனையோ வேலை—இந்தச் சாதாரண விஷயமா நினைவிலே இருக்கும்—என்றும்.
உனக்கு எங்கே அப்பா, இதெல்லாம் இப்போது நினைவிலே இருக்கப் போகிறது—காலம் மாறிவிட்டதல்லவா, உன் நிலையும் மாறிவிட்டது. நினைப்பும் மாறிவிட்டது — என்றும்,
கேலியாகவும், கோபத்துடனும், இடித்துரைக்கும் போக்கிலும் ஒருவரைப்பற்றி அவருடன் தொடர்புகொண்ட மற்றவர் பேசுவது, கேட்டிருப்பாய்.
நினைவு என்பதே பல்வேறு காரணங்களாலே கலைந்தும், குலைந்தும், சிதைந்தும் சிதறியும் போவதுண்டு.
அப்பாவித்தனம், அகம்பாவம், தொல்லைகள், நிலைமையில் மாற்றம். இவைபோன்ற காரணங்களால் நினைவு மாறிவிடுவதுண்டு.
சிலர், வேண்டுமென்றே, நினைவு இல்லாததுபோல, நடிப்பதுண்டு—தமது வசதிக்காக!
சிலர், எதிலேயும், தாம் பற்றற்றவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவேண்டியேகூட, எதுவும் தமது நினைவிலே தங்குவது இல்லை, என்று கூறி, அப்படிக் கூறிக் கொள்வதிலேயும் பெருமை இருப்பதாக எண்ணிக் கொள்வதுண்டு.
தலையைச் சொரிந்துகொள்வது—நெற்றியைத் தடவிக் கொள்வது புருவத்தை நெரித்துக்கொள்வது —இப்படி எல்லாம், செய்வர், நினைவிலே இருந்து கலைந்து விட்ட எண்ணத்தை மீண்டும் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவர!
ஒருநாள், மரப்பொந்து ஒன்றிலே குடியிருந்து வந்த சிறு பறவையின் குஞ்சு, கீழே, தவறி வீழ்ந்துவிட்டது; பல ஆண்டு-