131
கடிதம்: 144
பட்டப் பகலில்...! (3)
கனவின் தன்மை—
மேனாட்டார் கனவுகள்—
தம்பி!
களத்தில் கடும் போரிட்டுக் களைத்துப்போன வீரன், ஆற்றோரத்தில், அந்திசாயும் நேரத்தில், படுத்தபடி, எதிர்ப்புறம் நடமாடிக்கொண்டிருந்த எதிரிநாட்டுப் படையினரைக் கண்டு, கலங்கினான்; மனம் பாடுபட்டது; ஏதேதோ எண்ணிக் கொண்டான்; விழித்த நிலையிலேயே கனவு காண்கிறான்— என்று குறிப்பிட்டிருந்தேன். அவன் எண்ணம் என்ன என்று அறிய ஆவலாக இருந்திருப்பாய் என்பது தெரியும்; தெரிந்து? என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? சென்ற கிழமை ஓய்வே இல்லை! தரப்படவில்லை!! இப்போது மட்டும் என்னவாம்! உனக்கு மடல் தீட்டிக்கொண்டிருக்கிறேன்—துவக்குகிறேன்— கீழே சித்தாத்தூர், தூசி, உக்கல், வெங்களத்தூர் என்று ஊர்ப் பெயர்களையும், அங்கு செல்லவேண்டிய நேரம் பற்றியும், வடாற்காடு வட்டத் தோழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திருமண வீட்டிலே சாப்பாட்டுக்கு எப்போது அழைப்பார்கள்— சாப்பிடாமல் போய்விட்டால் சங்கடப்படுவார்கள்—நேரமோ அதிகமாகிறது — எப்போது அழைப்பார்களோ— என்று