பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

கொத்தும், கழுகு; இவன் நமது உரிமையைக் கோத்தி அழித்து விட்டவன்! உதிரம் குடிக்கும், நரி; இவன், மது குடிக்கிறான்; நமது நாட்டு மானத்தைக் குடித்துவிட்டோம் என்ற மண்டைக் கனம் கொண்ட நிலையில்! இவன்முன் ஆடாதே! ஆடாதே!

ஆமாம்! ஆடமாட்டேன்! வெட்டிச் சாய்க்கட்டும். துண்டான கால்கள் துடிக்கட்டும், கரங்கள் துடிக்கட்டும், அந்த நாட்டியத்தைக் காணட்டும்! உயிரோடு இருக்கும் நான், ஆடமாட்டேன்!! இந்த நாடு, என் நாடு! இந்த மண், இந்த நாட்டு மக்களுடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் பட்டுப்பட்டு மணம் பெற்றுவிட்டது! புனிதமாகிவிட்டது! இதிலே, குழந்தையாகத் தவழ்ந்தேன்; குமரியாக நடந்தேன்; இன்று கூலிக்காரியாக ஆட முனைந்தேன்! நல்ல நேரத்திலே வந்தீர்கள், எனைத் தடுக்க. நான் ஆட போவதில்லை! நாட்டைப் பிடித்துவிட்டோம் என்று இறுமாந்து கிடக்கிறான்; இவன். இடிபாடுகளையும், பிணங்களையும்தான் காணவேண்டும்; மாளிகைகளையும், அங்கு அடிமை நிலையில் உலவும் ஆடவரையும் பெண்டிரையும் அல்ல. நம்முடையதாக இருக்கும் வரையில் தான், நாடு! மாற்றானிடம் சிக்கினால், நாடாகுமா? காடு! சுடுகாடு!!

அங்கம், தங்கம்!—என்றனர்; அழைத்து வா, என்றேன்! இழுத்துவந்து நிறுத்தினார்கள்! என் மடியில் இருக்கத்தக்கவள்தான், என்று எண்ணினேன்! அடி, ஆடிப்பிழைப்பவளே! வலுவிழந்ததால், நாடிழந்தான்! திறமைமிகுதியால் வெற்றி வீரனானேன்! அவன் ஏதோ உளறுகிறான்; அவன் உரைகேட்டு, ஆடுவதை நிறுத்தி விட்டாயே! ஆகுமா இந்த அகந்தை!! மாற்றானின் மண்டையைப் பிளந்த கரங்கள் இவை! மலரணையில், உன் கால்களை வருடத் தயாராக உள்ளன!! பொறிபறக்கும் கண்ணினனாய்ப் போர்க்களத்திலே சுற்றினேன்; வெற்றி பெற்றேன்; காலமெல்லாமா, கரியுடன் கரி போரிடுவதை, கால்கை இழந்தவர்கள் துடிதுடிப்பதைக் கண்டபடி இருப்பது; கண்களுக்குக் கனிவு வேண்டாமா! உன்னைக் கண்டேன்! பாலைவனம் நடந்துசென்று, நெடுந்தொலைவில், பனி நீரோடையைக் கண்டவன் போலானேன்! அள்ளிப் பருகப்போகும்போதே அது கானல் நீராகிடவா வேண்டும்!! அவன் அனுபவமற்றவன். பிழைக்கத்தெரியாத அப்பாவி! நாடகம்! பற்றாம்! மரபாம்! மாண்பாம்! பொருளற்ற வார்த்தைகள்! இவன் நாட்டின் இலட்சணம் தெரியாதா, எனக்கு. எங்கு பார்த்தாலும் பொட்டல் காடுகள்! எவரும், கடினமாக உழைத்தாக வேண்டும். பொன்விளையும் பூமியோ