153
பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாய் இருங்கள்; பொழுது விடியும்.
திட்டம் இரண்டு மூன்று நிறைவேற வேண்டும்; பிறகே கஷ்டம் போகும்.
காங்கிரசை ஆதரியுங்கள்; கண்டது கேட்டுக் கெட்டுப் போகாதீர்கள்.
காந்தியின் கட்சி எங்கள் கட்சி; உங்களைக் காப்பாற்றுவது இந்தக் கட்சி!
எதிர்த்தால் சும்மா விடமாட்டோம்; எம்மிடம் படைபலம் மிக அதிகம்.
ஏழை பணக்காரன் என்று பேதம் பேசிப் பாழ் ஆகாதீர்.
இருப்பவனிடம் இருந்தால்தான், இல்லாதவனுக்குத் தருவான். இதுதான் எங்கள் சமதர்மம்! இதை எங்கும் நீங்கள் காணவில்லை.
வந்தேமாதரம் ஜேஇந்து! வருகுது தேர்தல் ; ஓட்டுக்கொடு!‘வந்தே’—என்று அமைச்சர் துவக்கும்போதே. அதிகாரி, அமைச்சருக்கு வழி அமைக்கும் அலுவலில் ஈடுபடுகிறார்; சீமான்கள் அமைச்சரை நெருங்குகிறார்கள்; இரண்டொருவரிடம் பேசுகிறார் அமைச்சர். பொருளற்றதை; அமைச்சரின் பேச்சுக்குப் பொருள் கண்டுபிடித்துப் பூரிப்படைகிறார் சீமான்; தொழுவத்திலுள்ளதைப் பார்ப்பதுபோல, தொலைவிலுள்ள ஏழைகளை அமைச்சர் பார்க்கிறார்: தலையைக் கணக்கெடுக்கிறார். அவர்கள் வயிறு காய்வதைக் கவனிக்க மறுக்கிறார்.
மருமகன் விஷயம்?
கவன மிருக்குது!
மாட்டுச் சந்தை?
கேட்டுப் பார்க்கிறேன்!
இங்கா? அங்கா? எங்கு நான் நிற்க?
சொல்கிறேன் சீக்கிரம், நல்லபடி அமையும்
xl.—10