பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

உரத்தக் குரலெழுப்புகின்றார்—உள்ளத்தில் குழப்பம் மூண்டதாலே! இதனை நான், அன்பு சொரிந்திடும் குழாத்திடை இருந்தகாலை எண்ணிக்கொண்டேன் —மிரட்டிடும் பேச்சைக் கேட்டு மிரண்டிடுவாரோ சிலர் என்று—தம்பி! அதுதான் இல்லை! தம்பிகள் சிலர் போனார்கள். கழகத்தகுதியும் உடனே போச்சு! இங்கு இனிக் கழகம் தன்னைச் சீந்துவார் எவரோ என்று ஏளனம் பேசினாரே, ஏமாளிகளானோர் சில்லோர், பார் நமது திருவிடம் காட்டும் கோலம் புரிந்தது பண்டிதர்க்கு, பகற்கனவு என்றார் பழுக்காப் பான்மையினார் சிலரும். பண்டிதர் உணருகின்றார், பரணியாகித் தரணியெங்கும் பரவிடும், திராவிட நாடு திராவிடருக்கே என்னும் கொள்கை வளர்ந்துள்ள வகையும் அளவும். ஆகவேதான், அவரும் அச்சம் மிகவும் கொண்டு அச்சுறுத்துகின்றார்; அழித்திடுவேன் படையால், அமளிக்கும் தயார் என்கின்றார். காட்டுவது எதனை, இந்தக் காட்டுப் பேச்சு? கண்மூடி இருந்து விட்டோம்; இயக்கம் இறந்துபடும் தானாக என்றெண்ணி ஏமாந்துபோனோம்; இல்லை! இல்லை! இவ்வியக்கம் எங்கெங்கும் பரவும் போக்கு ஏதேனும் ஆபத்துண்டாக்கும்; எனவே, இதனைப் பலமாகத் தாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார் பண்டிதர் என்பதன்றோ பொருளாகின்றது, தம்பி! பட்டபாடு வீண்போயிற்றா! இதோ, பண்டிதர் பதைத்து எழுகிறாரே! பகற்கனவு என்றா அவரும் பரிகாசம் பேசிவிட்டு, பாடிக்கொண்டே பழகுவோம்; பருகிக் கொண்டே பாடுவோம் என்று ஆகிவிட்டார்! இல்லை; தம்பி! நான் காடும் மேடும் சுற்றிப் பட்டிதொட்டியில் பேசி, கண்டிடும் காட்சிகள், மொத்தமாய்த் தந்திடும் நிலைமை விளக்கமது நேருபண்டிதர்க்குத் தெரிந்துவிட்டது; புரிந்துவிட்டது! இனி, இரண்டில் ஒன்றுதான் — நம்மை அடியோடு அழிப்பது, அல்லது நமது கொள்கைக்கு மதிப்பளிப்பது!

இத்துணை வீரமுழக்கமிட்டவரா, இறங்கிவருவார் என்று கேட்பது புரிகிறது. தம்பி! ஆனால் இதனைக் கேள், ஏறினோர் இறங்கவேண்டும், மேலும் ஏறிட இடமில்லாதபோது! பண்டிதர் போக்கு, பழைமை அறிந்தோர்க்கு பயமூட்டாது! வேகப்பேச்சு, அவருக்கு வெல்லக்கட்டி; கரைந்துபோகும்!! ஆகாதென்பார்! ஆர்ப்பரிப்பார்! அரிமாபோலக் குரல் எழுப்பிடுவார்! எல்லாம், கட்டம் ஒன்று, முடிவல்ல!! கதையை அறிந்திட வழி சொல்லிடுவேன். பாகிஸ்தானை ஜின்னா கேட்ட போது, பதைபதைத்தது கொஞ்சமா? பகை கக்கியது சாமான்யமா? கட்டம் ஒன்று!! கண்டோமே! இறுதியில் நடந்தது என்ன, தம்பி! கராச்சி தலைநகர் ஆயிற்று, காயிதே