இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
165
கடிதம்: 147
பணபாணம், பஞ்சு பஞ்சாக...
சட்டசபையில் திராவிடநாடு பற்றி அமைச்சர் கருத்து—
தேர்தலில் பண பாணம்—
தம்பி!
நரகல் நடையில் ஏசுவார்கள்!
பழிச்சொற்களை வீசுவார்கள்!
வழிமடக்கி மிரட்டுவார்கள்! வம்புவல்லடிக்கு வருவார்கள்!
வழக்கில் சிக்கவைப்பார்கள்!
தோழமையைக் கெடுப்பார்கள்!
கலகமூட்டிப் பார்ப்பார்கள்!
காவல்துறையை ஏவுவார்கள்!
எதையும் துணிந்து செய்வார்கள்!
இவ்வளவும், வேகத்துடன் விறுவிறுப்புடன், துணிச்சலுடன், செய்பவர்கள், நிரம்பிய நாடாகிவிட்டது தமிழகம்—