167
மரமண்டையாடா உனக்கு?
தண்டச் சோறு தின்னவா வந்து சேர்ந்தாய்?என்றெல்லாம்.
அரசியல் நிலையில், கேள்விகேட்க, வேலைவாங்க, திருத்த, கண்டிக்க, மடக்க, இடிக்க, தடுக்க, அதிகாரம் பெற்றவர்களாக அல்லவா, டில்லியில் உள்ள மேலவர்கள்—மூலவர்கள் உள்ளனர். அவர்களின் அனுமதி பெற்று, ஆதரவு நாடி, பிழைத்துத் தீரவேண்டிய அரசியல் கழைக்கூத்தாடிகள், பாவம், என்ன செய்வார்கள்? எதிர்த்துப் பேச முடியுமா? ஏனென்று கேட்க முடியுமா? சீட்டுக் கிழிந்துவிடுமே — ஆகவே, காட்டிய வழிநடக்க, நீட்டிய இடத்தில் கையெழுத்திட குட்டும்போது குனிய, தொட்டிழுக்கும்போது பணிய வேண்டிவருகிறது.
தி. மு. கழகத்தை அழித்தொழித்துக் காட்டுகிறோம். எம்மை அழித்துவிடாதீர்கள் என்று இறைஞ்சிக் கேட்டுப் படைபலம் பெற்றுத் தேர்தல் களத்திலே நம்மைச் சந்திக்க வருகிறார்கள், இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள்.
நிலைமை, தம்பி! என்னவென்றால், தி. மு. கழகம் குறித்து டில்லி மேலிடம் கேட்டபோதெல்லாம், தென்னகக் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் கீர்த்தியும் கித்தாப்பும் கெட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில், தி. மு. க. பற்றி.
சீந்துவார் இல்லை
சிதறிப்போகும்
என்றெல்லாம் சொல்லிவைத்திருந்தார்கள். தென்னகக் காங்கிரஸ்காரர் சிலருக்கு, உண்மையாகவே, அகில உலகிலும் தம்மைவிட அறிவாளிகள் இல்லை, தம்மைத் தவிர தியாகத் தீயிலே குளித்தெழுந்த தீரர்கள் இந்தத் தரணியிலேயே வேறு எவரும் இல்லை, என்ற எண்ணமும், கழகத் தோழர்கள் ஏதும் அறியாதவர்கள், எத்தர்களின் பிடியிலே சிக்கிக்கொண்ட