168
ஏமாளிகள், வெறிச் செயலில் ஈடுபடுவோர் என்று ஓர் எண்ணமும் இருக்கிறது.
என்று நம்மை ஏசுவதன்மூலம், பண்பின் பெட்டகம் என்ற பட்டப்பெயர் தமக்குப் பாரிலுள்ளோர் கூடித் தந்துவிடுவர் என்று எண்ணிக் கொண்டுள்ளனர்.
தென்னகத்துக் காங்கிரஸ் தலைவர்கள், தி. மு. க. கவனிக்கப்படவேண்டிய அவசியமே இல்லாத ஒரு சிறு கும்பல் என்று, வடக்கே அமைந்துள்ள பேரரசு நடாத்துவோருக்குக் கூறிவிட்டனர்; ஆனால், நாளும் கழகநடவடிக்கைகள் புது விறுவிறுப்புடன் நடப்பதும், மக்கள் ஆதரவு பெருகுவதும், கிளர்ச்சிகளில் தி. மு. கழகம் ஈடுபடவேண்டிய நிலையும் தேவையும் ஏற்படும்போது, அதன் வடிவமும் வண்ணமும் வகையாக இருப்பதும், பேரரசினருக்குப் புரிந்துவிட்டது. எனவே, அவர்கள் தி. மு. க. பற்றி, நீங்கள்.
தப்புக் கணக்கு காட்டினீர்கள்.
தவறான விளக்கம் கொடுத்தீர்கள்.
வளரவிட்டு விட்டீர்கள்.
வெறும் வாய்ச்சவடால் அடிக்கிறீர்கள்.
என்று கூறிக் கண்டிக்கிறார்கள்; ஏன் தி. மு. கழகம் வளருகிறது? சிறு கும்பல் என்றீர்கள்; அது பெரும் இயக்கமாகி இருக்கிறது; சீந்துவார் இல்லை என்றீர்கன், எல்லாத் துறைகளிலும் கழகக் கரம் தெரிகிறது; சிதறிப்போகும் என்றீர்கள் வளர்ந்த வண்ணம் இருக்கிறது; ஏன் இப்படித் தவறான தகவல் கொடுத்தீர்கள் என்று இடித்துக் கேட்கிறார்கள்.
பேரரசிலுள்ளோரின் மனப்போக்கை எடுத்துக் காட்டும் முறையிலே, வடநாட்டு ‘ஏடுகள்’ அடிக்கடி எழுதுகின்றன.
தம்பி! சட்டமன்றத்தில் ஒருமுறை, நிதி அமைச்சர் சுப்ரமணியம்,
திராவிடநாடு கேட்பதைப் பத்து வருடம் தள்ளிப் போடும்படி பேசினாரே. நினைவிலிருக்கிறதல்லவா? அப்போது, பம்பாய் ஆங்கில ஏடொன்று, எடுத்தது பேனா, தொடுத்தது கண்டனம் அமைச்சர்மீது.