178
கூரை குடிசை உம் பக்கம்! கூடகோபுரம், மாடமாளிகை, எம் பக்கம்! யாது செய்யவல்லீர்கள்! எமக்கிருப்பது பண பாணம்! கவசம் இருக்குது தங்கத்தால்!—என்று காட்டாட்சி, நடத்துபவன் போட்டிடும் முறையில் கூச்சலிட்டு, மிரட்டுது நம்மைக் காங்கிரசு!
உண்டி குலுக்கி அலைவீர்கள், நாங்கள் ‘உம்’ என்றால் இலட்சம் உருண்டுவரும்! பஞ்சைகள் நீங்கள், அறிவோமே! பங்களாவாசியை எதிர்க்கப்போமோ?—சீமான்களின் அணைப்பிலே உள்ள காங்கிரஸ் கட்சி கேட்கிறது.
இருட்டடிப்பால் தாக்கிடுவேன்! இழிமொழியில் அமிழ்த்திடுவேன்! ஏன் என் பகையைத் தேடுகிறாய், எவரும் என்னிடம் தப்பியதுமில்லை! தகரக்குவளை, நீயப்பா! தகாது உனக்கு தேர்தல் என்று, தர்பார் நடத்தும் காங்கிரசு எச்சரிக்கை விடுகிறது.
ஆளப்பிறந்தவர் நாங்களன்றோ! அதற்கேற்ற அந்தஸ்து எமக்குண்டப்பா! வீணாய் ஆசை கொண்டலைந்து, விரோதம் தேடி அழியாதே! விடமாட்டோம் உமை நாடாள், என்று வீறாப்புப் பேசுது காங்கிரசு.
காங்கிரசு போடும் கூச்சலினால், கதிகலங்கிப் போவதற்கா நாங்கள் உமக்குத் துணை நிற்போம், என நாளும் மக்களிடம் கூறிவந்தோம்!!
ஆயின், காங்கிரசுக் கட்சிக்கு அன்று 1957ல் இருந்ததைவிடப் புது ஆற்றல், வந்துளதோ இன்றென ஆராய்ந்தால், மமதை அதிகம் வளர்ந்ததன்றி, தூய்மை வாய்மை நேர்மையுடன் வலிவு வளர்ந்த அறிகுறிகள் எங்கும் காணோம்? கண்டனையோ?
கண்டவர் காங்கிரஸ் நுழைந்ததனால், கரையுது மதிப்பு மாண்பென்று, கதறும் சஞ்சீவியார் நிலையும், இதற்குச் சான்று; வேறென்ன?
பற்பல தொகுதியில் வேட்பாளர் என வெளிக் கிளம்பிய காங்கிரசார், முன்னாள் எங்கு இருந்தவர்கள்? முறைகள் யாவை அவர் தொழிலில்? மூதறிவு மிக்கவரோ?—நாட்டவர் இதனைக் கேளாரோ?
இவர்தான் ‘ஓட்டு’ கேட்க வரும் உத்தமர் இரத்தினம், காங்கிரசு; இவர்க்கே உங்கள் ஓட்டுகளைக் கொடுத்திடவேண்டும்