பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

உதய சூரியன்
எழுவது திண்ணம்

உலகு புகழும் இளங்கோவடிகள் வாழ்த்தியது
உதய சூரியன்

உதய சூரியன் கிளம்பிவிட்டால்
உண்டோ இருளும் நாட்டில்? வீட்டில்?

தம்பி இப்படியெல்லாம், நீ நண்பர்களுடன், இனிய குரலெழுப்பித் தெருக்களிலே பாடிக்கொண்டு செல்வது போலவும், முதியோரும் வாலிபரும், ஆடவரும் ஆரணங்குகளும், முகமலர்ச்சியோடு, இசைகேட்டு மகிழ்வதுபோலவும், ஓர் காட்சி காண்கிறேன். நீ மனம் வைத்தால், நாடு காண முடியாதா, அந்தக் காட்சியை!


19-11-61

அண்ணன்,
அண்ணாதுரை