பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

கடிதம்: 147

முயன்றால் முடியும்!

அமைச்சர் கருத்துப்படி காங்கிரஸ்—
காங்கிரஸார் கொடுமை—
தி. மு. க. வின் தனித்தன்மை—

தம்பி!

காங்கிரஸ் கட்சியில் இன்று உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களை என்னென்ன பெயரிட்டு அழைக்கலாம் என்பதைக் கூறட்டுமா? நமக்கும் அவர்களுக்கும் கட்சி வேறு என்பதாலே ஏற்படக்கூடிய எரிச்சல் காரணமாக அல்ல: அவர்களின் இயல்பு, நிலைமை, நினைப்பு, செயல் ஆகியவைகளைக் கவனித்து, அவைகளுக்கு ஏற்ற பெயர் என்னென்னவாக இருக்கமுடியும், என்னென்ன பெயர்கள் பொருத்தமுள்ளதாகவும் பொருள் உள்ளதாகவும் இருக்கமுடியும் என்பதைக் கவனித்துக் கூறுகிறேன்; கசப்பு, கோபம் காரணமாக அல்லவே அல்ல.

இடந் தேடிகள்
பணம் பிடுங்கிகள்
பத்தாம் பசலிகள்