பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

முத்தம்மா :–

வந்து?

முனியன் :–

வந்தா? மாலைகள் பலப்பல போட்டாரடி!
மண்டி யிடக்கூடப் பார்த்தாரடி!
மானம் காத்திட வேணுமென்று
மனுக்கள் கொடுத்தார் அய்யாவிடம்!
காங்கிரஸ் வெற்றி உம்கரத்தில்
கருணை காட்ட வேண்டு மென்றார்!

முத்தம்மா :–

உங்க அய்யாவிடமா?
அறுந்த விரலுக்கும் சுண்ணாம்பு
அய்யே! அவர்தர மாட்டாரே!
அடுத்த வீட்டான் வாழ்ந்திட்டால்
ஆத்தே! வயிறு எரிவாரே!
அய்யா இலட்சணம் ஊரறியும்
யார்தான் அவரை நாடிடுவார்!

முனியன் :–

எதையோ சொல்லு முத்தம்மா!
எவன்உன் பேச்சை மதிக்கிறான்!
அய்யா தேர்தலில் குதிக்கிறார்
ஆறேழு இலட்சம் செலவழிக்கிறார்!!

முத்தம்மா :–

இவரா காங்கிரஸ் கட்சியிலே
இப்ப தேர்தலில் நிற்கிறார்.
கள்ளுக் கடையை நடத்தினவர்
இந்தக் கண்ணியவான் அல்லவா?


ix—13