பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

முனியன் :–

அதெல்லாம் எனக்குத் தெரியாது!
ஆமாம், அவர்க்குப் படிப்பில்லை!
ஆன்றோர் பேசும் சொல்லெல்லாம்
அவர்க்குக் காதில் ஏறாது.
அய்யா உழைக்க மாட்டார்தான்!
அதனால் என்ன முத்தம்மா!
அனைவரும் கூடி ஒருமுகமாய்
உம்மால்தான் இது ஆகுமய்யா
உடனே கைஎழுத்திடும் என்றார்.

முத்தம்மா :–

இப்படியா காங்கிரஸ் சீரழியுது
எப்படித்தான் ஒப்பி மக்கள் ஓட்டளிப்பார்கள்?
தப்பிதங்கள் மெத்தவுமே செய்தவராச்சே
தருமம் துளிகூடச் செய்தறியாரே!

முனியன் :–

புலம்பிக் கிடடி முத்தம்மா!
அய்யா, புதுசா கதரு போட்டாச்சி!
போகுது புறப்பட்டுக் கொடிபடையும்
போலோ பாரத் மாதாக்கீ
ஜே! ஜே! என்று கூவிக்கொண்டு.

முத்தம்மா :–

ஓட்டுக் கேட்கவா போகுது
உலக உத்தமர் வளர்த்த படை?

முனியன் :–

அய்யாவுக்கு ஓட்டுபோடச் சொல்லி நேருவும்
அனைவரையும் கேட்கிறாரே
இன்னும் என்னடி?