பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

வேண்டுமென
         வாதாடி
ஏழைவாழ வழிதேடி
ஏற்ற பொறுப்பை
       நிறைவேற்றி
விருந்து வைபவம்
          நாடாமல்
எதிர்க்கட்சியாய்
          பணியாற்றி
விதவித வடிவம்
          தேடாமல்

நாடு மீட்டிட, கேடு அழித்திட
எதிர்ப்புக்கண்டு அஞ்சாமல்
ஏளனம் கேட்டுப் பதறாமல்
எங்கள் தொண்டு நாட்டுக்குண்டு
எதையும் தாங்கும் இதயம் உண்டு
தென்னகம் பொன்னகம் ஆகிடவும்
தேம்புவோர் நிம்மதி பெற்றிடவும்

எல்லோருக்கும் நல்வாழ்வு எங்கும் நீதி நிம்மதி
                           கண்டிட நாளும் போராடி!

பணிபுரிவது நாடறியும்
அறிவொளி பரப்பி
அரசியல் விளக்கி
மக்களாட்சியின் மாண்பு காத்திட
மீண்டும் அனுமதி வேண்டி நிற்கிறோம்.
நாட்டினரே நல்லாதரவு தந்திடுவீர்