பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

விட்டதும் இத்துணை தொடை நடுக்கமா!—என்று ஏளனமாக எண்ணுவர்.

அதுமட்டுமல்லவே! வடநாட்டு ஏகாபத்தியத்தை மகிழச் செய்வதற்காகவே, இப்போது, தி. மு. கழகத்தவரைத் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணுவார்கள். அந்த ஐயம் அகற்றவும், ஆற்றலைத் தக்க வழியில் பயன்படுத்தவும், வீரவெண்பாப் பாடிவர வேண்டுகிறேன். இடையிடையே என்னை இகழ்ந்து விருத்தம் பாடிக் கொள்ளட்டும்—வேண்டாமென்று சொல்ல நான் யார்?— மேட்டுக்குடியினனா? ஒட்டா? உறவா? உம்! ஆகட்டும், என்னை ஏசி, அகவல் அந்தாதி, ஏதெது முடிகிறதோ அவ்வளவும். ஆனால், அந்தப் பழைய போர்க்குரல்—முழக்கம்—கண்டதுண்டமாக்கிடும் வீராவேசம்— அந்தப் பக்கம் கொஞ்சம் பாயட்டும். வடநாட்டு ஏகாதிபத்தியத்தின்மீது வெகுண்டு பாடிய வெண்பாக்களை, நாடு கேட்கட்டும்.

என் காதுகளிலே ஒலித்தபடிதான் இருக்கின்றன, அந்த வெண்பாக்கள்.

தெற்கு வரண்டதேன்? தீக்காடாய்ப் போனதேன்?
குற்றுயிராய் வாழ்வு குலைந்ததேன்?—பொற்றொடியே!
அஞ்சாமல் கூறிடுவேன் அத்தனைக்குங் காரணந்தான்
வஞ்சனையாளர் வடக்கு.

தென்னாட்டின் செல்வமெலாஞ் சேர்த்து டில்லியில்
                                                                                           குவித்தே

அந்நாட்டைப் பூக்காடாய் ஆக்குவதும்—இந்நாட்டில்
மிஞ்சும் தொழில்களையும் வேரறுத்து மாய்ப்பதுவும்
வஞ்சனையாளர் வடக்கு.
                                              
துன்பநிலை நீங்காத் தூயோர் புகழ்கின்ற
‘இன்பத் திராவிடம்’ இங்க மைந்தால்—தென்னவர்பால்
தஞ்ச மடைவதல்லால் தன்னாட்சி காணுமோ
வஞ்சனையாளர் வடக்கு.
                                              


ix.—2