பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

அவரெல்லாம் கூடுமிடம், திருப்பரங்குன்றம்!

அறமறிந்தோர் மாமன்றம் திருப்பரங்குன்றம்!

விடுதலைக்கு வழிகாண, திருப்பரங்குன்றம்.

எண்ணம் வண்ணமாக, திருப்பரங்குன்றம்!

கூனிக் கிடந்திட மாட்டோம், குமுறிச் செத்தி மாட்டோம், கொத்தடிமையாகிடமாட்டோம்! சித்தம் தடுமாறிடவும் மாட்டோம்! இத்தரையில் எத்தனையோ நாடு! எங்கட்கு இல்லை எம்நாடு! பெற்றிடுவோம் திருநாடுதனை, குற்றுயிராகும் வரை போராடி யேனும். பண்பாடக் கேட்டிடுவீர்! திண்தோளர் கூடிடுவீர்! எழுவோம், பகைவெல்வோம்! இதற்கான அறிவிப்பு திருப்பரங்குன்றம் மாநாடு. வீரர்க்கு அழைப்பு, விடுதலை அணிவகுப்பு: திருப்பரங்குன்றம்!

தீரர் தோற்றதில்லை

கருப்பர் என்றனர், இன்று வெள்ளையர் முகம் வெளுத்தது பயத்தால். ஏன்? கட்டுண்டுகிடந்தவர்கள், வெட்டுண்டு மடிவதேனும், விடுதலைக்கே உழைப்போம் என்று கூறிவிட்டனர். இடியோசைகேட்க நாகமென வெள்ளையர், விரண்டுவிட்டனர். சுடுகிறார்கள், சாகிறார்கள்; எனினும், செத்தவர்போக மிச்சம் உள்ளவர், விடுதலை, விடுதலை, விடுதலை, என்ற முழக்கமிடுகின்றனர். குண்டுகள் தீர்ந்துவிட்டன — சாவுக்கஞ்சா வீரர் தொகை குறையவில்லை. முழக்கமிடுகின்றனர், எமது நாடு, எமது அரசு, எமது உரிமை. திருப்பரங்குன்றம் வாரீர், விடுதலை பெற்றோர் புகழ்பாட, விடுதலைக்கான பாடம்பெற, தீரர் தோற்றதில்லை, திருவிடரும் தோற்கமாட்டார், திருப்பரங்குன்றம் இதை உலகுக்கு உணர்த்த.

பொங்கி எழுகிறது

தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவுவைத்து, தனிநாடு சமைத்திடுவோம் வாரீர் என்று, பன்னிரண்டு ஆண்டுகளாய்ப் பேசிவந்தோர், இன்று பகைவர் பரிகசிக்கப் பேசுகின்றார். அவரல்ல கழகம், என்று அறிவிக்க அனைவருமே வந்திடுவீர் மாநாட்டுக்கு. திருப்பரங்குன்றம் தெரிவிக்கட்டும், விடுதலை உணர்ச்சி மறையவில்லை. மங்கவில்லை! மாறாகப், பொங்கி எழுகிறது புதியவேகத்துடன்—மாற்றாரும் அவரை அடுத்துப் பிழைப்போரும் அகலக் கண்திறந்து, ஆச்சரியப்படத்தக்க