பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

மங்கிப்போகிறது. நமது நாடு ஏழை நாடு; வளமற்றது, வாழவைக்கும் வல்லமை பெற்றது அல்ல, என்று நாமே எண்ணும்விதமான, புத்தித் தடுமாற்றத்தைக் கொடுத்து விடுகிறது, அடிமைத்தனம்; நாட்டிலே செல்வம் இருக்கும், நாட்டவர் கண்களுக்குத் தெரியாது! வயலில் வளம் இருக்கும்! பெற்றிட வழி தெரியாது! நாட்டுக்குப் புகழ்மிக்க வரலாறு இருக்கும், படித்திட வாய்ப்பு இருக்காது! கண்ணுக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும்! நம்மை நாமே ஆண்டுகொள்ள முடியாதவர்கள்— நம்மை ஆள நம்மைவிட வலிவுமிக்கவர்கள், அறிவுமிக்கவர்கள், அனுபவமிக்கவர்கள் வந்திருக்கிறார்கள். எப்படி ஆள்வது என்பது அவர்கட்குத் தெரியும்! ஆளும் பொறுப்பை நாம் அவர்களிடம் விட்டு விட்டு, ஆடுமாடுகளை மேய்த்திடலாம், காடுமேடு திருத்திடலாம், கைகட்டிப் பிழைத்திடலாம், கடைகண்ணி வைத்திடலாம், கால் வயிற்றுக்குக் கிடைத்தாலும், கந்தா! முருகா! என்று பஜனை செய்தபடி இருந்து, மாயாபந்தம் விடுபட்டு, மகேசன் அடி சேர்ந்துவிடலாம். அது வரையில் இந்தக் ‘கட்டை’ நடமாடும் இடம். இந்த உலகம் — நாடு—வீடு!—என்று வேதாந்தம் பேசிடுவர் மக்கள் — அடிமைப் பிடியில் இருக்கும் காலை! அவர் கட்கு, விழி இல்லை—நாட்டைக்காண, நல்வழிகாண! அதனால் தான் பேரறிவாளர் சொன்னார், “விடுதலை பெற்றோர்,விழி பெற்றோர்!” என்று.

ஊர்வலத்திலே சென்றவர்கள், அந்தவிதமான விழி பெற்றவர்கள் அல்ல! விடுதலை பெற்றுத் தந்தவர்களின் முகாமிலே நமக்கு இடம் கிடைத்துவிட்டது! அவர்கள் ஈட்டியுள்ள செல்வாக்கு, நமக்குப் பயன்பட வழி கிடைத்து விட்டது! அவர்கள் பெற்றுள்ள வடுக்களைக் காணும் மக்கள், நெஞ்சம் நெக்குருக நிற்கிறார்கள்! உமது கட்டளைப் படி நடந்து கொள்கிறோம் என்று உள்ளம் உருகிக் கூறுகிறார்கள்! நாடு, மீட்டுத் தந்தவர்களுக்கு, நன்றிகாட்டுவதும், அன்புக் காணிக்கை செலுத்துவதும், நமது தலையாய கடமை என்ற உணர்வு கொண்டவர்களாக மக்கள் இருப்பது அறிந்து, இந்தப் பொன்னான வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்வோம் என்ற நோக்குடன், விடுதலைப்போர் நடத்தியவர்களின் முகாமுக்கு, தங்கக் கூடாரம் அமைத்துத் தருகிறோம், தர்பார் மண்டபம் கட்டிக்கொடுக்கிறோம், வெற்றிவிழா நடத்துகிறோம். விருந்துவைபவம் ஏற்பாடு செய்கிறோம், இசை நிகழ்ச்சியும் நாட்டியங்களும் களிப்பூட்டும் விதமானவைகளாக இருப்பது எமது பொறுப்பு, நீவிர் நடமாடும் பாதையில்