97
ஆனால், அந்தச் சளியின் தொல்லை, படுபவர்களுக்குத்தான் தெரியும்.
ஒரு வேடிக்கையான கதை சொல்வார்கள்:
விகடகவியான தெனாலிராமன், ஒருநாள். காளியைத் ‘தரிசனம்’ கண்டானாம்! கவிகளைக் காளி நேரடியாகக் காணக் கூடிய காலத்துக் கதை!
அந்தக் காளி, ஆயிரமுக மாகாளி!
முகம் மட்டும்தான் ஆயிரம்! கரங்கள் அவ்வளவு இல்லை!
கண்ட உடன் தெனாலிராமன், கடகடவெனச் சிரித்தானாம்.
அவன் அப்படிச் சிரித்தது கண்டு, எப்படி இருந்திருக்கும் மாகாளிக்கு!
என்னமோ கவிபாடுகிறானே, அழைத்தானே, ‘பிரசன்னமாகி, ஏதாகிலும் வரம் கேட்பான், கொடுக்கலாம்; ஆசாமி பிழைத்துப் போகட்டும் என்று பார்த்தால், கண்டதும் விழுந்து கும்பிடாமல், கடகடவெனச் சிரிக்கிறானே! எவ்வளவு மண்டைக் கர்வம் இவனுக்கு! சூலாயுதத்தை வீசி இவனைத் தொலைத்துவிடலாம் என்று மாகாளிக்குத் தோன்றிற்று. மறுகணம் கோபம் குறைந்துவிட்டது; “பாவம்! இவனோ கவி! எது மனதில் படுகிறதோ, அதை மிகைபடக் கூறிப் பழக்கப்பட்டவன்! உள்ளத்திலே கள்ளமில்லை! இவன்மீது கோபம் கொள்ளக்கூடாது!” என்று எண்ணி, “எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று கேட்டாள்.
“தாயே! தயாபரி! எனக்கு இருப்பது ஒரே மூக்கு! அந்தச் சனியனில் சளி பிடித்துக்கொண்டால், இந்த இரண்டு கைகளும் போதவில்லையே! அம்மா! உனக்கோ ஆயிரம் மூக்குகள்! உனக்குச் சளி பிடித்துக்கொண்டால் என்ன பாடுபடுவாயோ என்று எண்ணினேன், சிரிப்பு வந்துவிட்டது” என்று தெனாலி ராமன் பதிலளித்தானாம்.
மாகாளியும் விழுந்து விழுந்து சிரித்ததாகக் கதை!
தம்பி! நான் மாகாளியையும் கண்டதில்லை! தெனாலிராமனையும் கண்டனவல்ல. ஆனால், சளியின் தொல்லை நன்றாகத் தெரியும். அதுபற்றித் தெனாலிராமன் சொன்னதைக்