பக்கம்:தம்பியர் இருவர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () () தம்பியர் இருவர்

கிறான். தசரதன் பரதனிடம் காட்ட வேண்டிய அன்பைக் காட்டவில்லை என்பது விரிவாகக் கூறப் பெற்றுளது. இராமன் இதனை நன்குணர்ந்து பரதனைக் கானுந் தோறும் அதிக அன்பு காட்டினான் என்று நினைய வேண்டியுளது. திருமணத்தைக் காணத் தசரதனுடன் பரதனும் மிதிலைக்கு வந்து இராமனை வணங்குகிறான். அப்பொழுது,

'பன்னுதா ரைகள் தரத் தொழுது எழும் பரதனைப்

பொன்னின்மார்பு உறவனைத்து உயிர் உறப் புல்லினான்

தன்னையத் தாதைமுன் தழுவினான் என்னவே.”

(கம்பன்-1054)

இவ்வாறு இராமன் தழுவினான் என்று கவிஞன் கூறுவ தால், நமது ஊகம் பொருத்தமாகலாம். திருமணம் முடிந்து அயோத்தி வந்தவுடனே தசரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புகிறான். அதன் காரணம், முதலியன பிறிதோர் நூலில் விரிவாக ஆயப்பட்டது.

தசரதன் அவ்வாறு கேகய நாடு சென்று வருக, என்று பணித்தவுடன் இராமனை விட்டுப் பிரியவே பரதன் மிகவும் வருந்துகிறான். -

'ஏவலும் இறைஞ்சிப்போய் இராமன் சேவடிப்

பூவினைச் சென்னியிற் புனைந்து போயினான் ஆவியங்கு அவன்அலது இல்லை ஆதலால் ஒவலில் உயிர்பிரிந்து உடல்சென்று என்னவே.”

(கம்பன்-1310)

இங்கு இராமனை உயிராகவும் பரதனை உடலாகவும் கவிஞன் உவமித்தது பின்னரும் வலியுறுத்தப் பெறுகிறது. கேகயத்திலிருந்து மீண்டு தாயைக் கண்டு தந்தையின் இறப்பை அறிந்த பரதன் உடனே இராமனைப் பற்றித் தான் பேசுகிறான். - -