பக்கம்:தம்பியர் இருவர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 02 - தம்பியர் இருவர்

"வலியன் என்று.அவர் கூற மகிழ்ந்தனன்,

"இலைகொள் பூண் இளங்கோஎம் பிரானொடும்

உலைவில் செல்வத்த னோ? என, உண்டு, எனத் தலையின் ஏந்தினன் தாழ்தடக் கைகளே!”

(கம்:ன்-2104)

இராமன் பெயரைக் கூறினவுடன் பரதனுடைய கைகள் தலைமேல் அஞ்சலி செய்கின்றனவெனில், அவனுடைய அன்பு பெரியதா, அன்றிப் பத்தி பெரியதா என்று கூற முடியாத நிலையில் உள்ளது. இதனையடுத்துத் தூதுவர் தாம் கொணர்ந்த ஒலையைத் தருதலும், அதனை வாங்கிப் படித்துவிட்டு, உடன் புறப்படத் தயாராகி விட்டான் பரதன். ஏன் தெரியுமா?

'பூண வான்உயர் காதலிற் பொங்கினான்

தாணி லாமலர் துவினன் தம்முனைக் காண லாம் எனும் ஆசை கடாவவே.”

(கம்பன்-2108)

இராமனைக் காணலாம் எனும் ஆசையால் துாண்டப் பெற்றவனாய் அவர்கள் கொணர்ந்த ஒலையின் மீது மலர் களைத் துTவினானாம். அவனுடைய ஆசை எவ்வளவு அதிகம் என்பதற்குக் கவிஞன் அடுத்த பாடவில் ஒர் அளவு குறிக்கிறான். பொழுதும் நாளும் குறித்திலன் போயி னான், (2109) என்ற தொடரால், முதல் முதல் பாட்டன் வீடு வந்து திரும்பும் அரசகுமாரனாகிய பரதன் நல்ல நேரங்கூடப் பாராமல் புறப்பட்டுவிட்டான் என்றால், இராமனைக் காண அவன் மனம் துடித்த துடிப்பை யாரே அளவிட்டு அறிதல் கூடும்!

இராமனை அழைத்து வருவான் வேண்டித் தன் படை யுடன் புறப்பட்டுக் காட்டிற்கு வந்து விட்டான் அப்பெரு மகன். பரதனன நீண்ட நாட்பிரிவின் பின்னர்க் கண்ட இராமன்,