பக்கம்:தம்பியர் இருவர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 0 9

யாளமாக வைத்துப் பிரதிநிதி ஆள்வது முறையன்றோ? எனவே, இராமனுடைய அடையாளமாக அவனுடைய திருவடி நிலைகளைப் பெற்றுச் செல்கிறான். பரதன்.

- இவ்விரண்டு சோதரர்களும் அளவிலாப் பரிவினால் செய்துகொண்ட வாதத்திலிருந்து இராமனிடம் பரதன் கொண்ட பெருங்காதலும், அவனுடைய அடக்கமும் பணிவும் கற்றறிவுடைமையும் புலனாகின்றன.

பரதனும் தசரதனும்

எல்லை மீறிய அடக்கம் உடையவனாய் இருந்து விட்டமையின் பரதனைப்பற்றி நாம் அறிவதும் சற்றுக் கடினமாகவே உளது. பேச வேண்டிய இடங்களில் அவன் இரண்டொரு சொற்களே பேசுவதால் அவன் மனநிலையை விரிவாகக் காண இயலவில்லை. தந்தையாகிய தசரதன் பரதனைப்பற்றிப் பேசிய சில சொற்களைக்கொண்டு ஒரு முடிபுக்கு வந்தோம். அதாவது, தசரதனுக்குப் பரதனிடம் ஆதியிலிருந்தே அன்பில்லை என்பதுதான் அம்முடிபு. அவ்வாறாயின், பரதனாவது தசரதன்மேல் அன்பு பாராட்டினானா என்பதை அறிதல் வேண்டும். உண்மை யில் அன்பற்ற, சில சந்தர்ப்பங்களில் வெறுப்பையுங் காட்டிய தந்தையிடம் பரதன் அன்பு பாராட்டாது இருந் திருப்பின், அதில் வியப்பு ஒன்றும் இல்லை. அவ்வாறு இருந்தும் தந்தையன்பு மிகுதியும் இருந்திருக்கிறது பரதனுக்கு. தந்தை உயிருடன் இருந்த காலத்தில் பரதன் தனது அன்பை வெளிக்காட்ட வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால், கேகயத்திலிருந்து மீண்டு வந்த பிறகே அவன் தந்தை இறந்துவிட்ட செய்தியை அறிகிறான். உள்ளே அடைந்து கிடக்கும் அன்பு வெள்ளம் கரை புரண்டு வெளிப் படுகிறது. பரதனுக்கு.

தசரதனுடைய ஒவ்வொரு நற்பண்பையும் நினைந்து நினைந்து அர்ற்றுகிறான் பரத்ன். அவனுடைய வீரம், கொடை, பெருந்தன்மை ஆகிய ஒவ்வொன்றும் பரதன்