பக்கம்:தம்பியர் இருவர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 A (; . தம்பியர் இருவர்

கண்முன்னர் வந்து செல்கின்றது. அவன் இப்பொழுது அரற்றும் திறத்தை வைத்துத் தசரதன் உயிருடன் இருந்த பொழுது எவ்வளவு அன்பு செலுத்தியிருத்தல் கூடும் என்பதை அறிய முடிகிறது. ஆறாத்துயரத்தால் அரற்றும் பொழுதுகூடப் பரதனுடைய அடக்கமும் தன்னலமற்ற தன்மையும் வெளிப்படக் காண்கிறோம். பெரும்பாலும் இறந்த ஒருவரைப் பற்றி அழுபவர் ஒரு முறையைக் கையாள்வர். இறந்தவர் தமக்குச் செய்த உபகாரம், அவர் இல்லாமல் தம்மால் வாழ முடியாத நிலை என்பவை பற்றியே கூறியழக் காண்கிறோம். இறந்தவர்களிடம் சென்ற அன்பைக் காட்டிலும், அவர்களை இழந்து வருந்தும் தங்கள் மேலேய்ே இவர்களுடைய பரிவு மிகுதியும் இருக்கக் காண்கிறோம். பரதனுடைய புலம்பலில் அவன் தன்னைப்பற்றி ஒரு சொல்லும் கூறாமல் இருக்கிற பண் பாட்டைப் பார்க்கிறோம். உன்னை இழந்த காங்கள் இனி என்ன செய்வோம்!” என்று தன்மைப் பன்மையிற்கூட அவன் பேசவில்லை. இது ஒரு தனிச் சிறப்பாகும். அவன்,

திேயை மறந்தனை உனக்கு இதின் மாசு மேலுண்டோ'

- (கம்பன்-2149)

என்று கூறத் தொடங்கினான்: பிறகு, பலருக்கு உபகாரி யாய் வாழ்ந்த நீ இன்று உனக்கு மட்டும் வீடுபேற்றைப் பெற்றுச் செல்வது முறையோ?” (2150) என்றான். அடுத்து அவனுடைய நினைவு இராமன் மாட்டுச் சென்றது ஆம்! இராமனைப் பிரிந்து சென்று எவ்வாறு வாழ்கிறான் தசரதன்? இராமனைக் கணப்பொழுதும் பிரிந்து வாழ. விரும்பாத நீ, இப்பொழுது எவ்வாறு பிரிந்து போயினாய்?" என்கிறான்.

'கண்ணடை நூதலவன் மலைவிலின் நோன்மை நூறிய புதல்வனை எங்ங்ணம் பிரிந்து போயினாய்?’’ -

(கம்பன்-2151)