பக்கம்:தம்பியர் இருவர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 21

பொழுதேகூட, முடிசூடுதற்குரிய மூத்த மகன், தசரதனுக்கு உயிரனையவன். காட்டில் இருக்கிறான் என்றால், எவ்வாறு இதனை நம்புவது? அதுவும் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றுள்ளான் எனில், எவ்வாறு அச்சொற்களை நம்புவது? நம்ப முடியாத சொற்களைக் கேட்டால் யார் தான் உணர்ச்சி வசப்படுவர்?

எனவே, கைகேயி கூறிய இச்சொற்களை நம்ப முடியாதவனாகிவிட்டான் பரதன்; ஆனால், கூறிய ஆளைக் கவனித்தான். விளையாட்டுக்கு இதனைக் கூறக் கூடியவள் அல்லள் கைகேயி. அதுவும் அவளுடைய காதல் திருமகனைப் பற்றியா இவ்வாறு கூறுவாள்? எனவே, அவள் கூறியதால் ஒருகணம் நினைத்துப் பார்த்தும் வேறு வழி இன்மையின் நம்ப நேர்ந்தது. நம்பினவுடன் அச்சொற்கள் அவன் மனத்துள் பதிந்தன; பதிந்தவுடன் உணர்ச்சியைத் தூண்டின. என்ன உணர்ச்சி என்று நினைக்கிறீர்கள்? தந்தை இறந்தான் என்ற சொல் தோற்றுவித்த துயர உணர்ச்சி அன்று இது; தாய் பொறுப்பற்ற முறையில் கூறியதுபற்றித் தோன்றிய சின உணர்ச்சியும் அன்று. தன்னால் பொறுக்க முடியாத நிலையில் இதனைாக் கேட்க வும் நேரிட்டதே' என்று தன்மேலேயே தோன்றிய வெறுப் புணர்ச்சிதான் இப்பொழுது தோன்றிற்று. இவ்வெறுப் புணர்ச்சியால் தூண்டப்பட்ட பரதன் தாயை நோக்கி, 'அம்மா, இன்னும் கேட்கவேண்டுபவை என்னென்ன உண்டோ, கூறிவிடுங்கள்,' என்கிறான். -

'வனத்தினன்' என்றுஅவள் இசைத்த மாற்றத்தை

கினைத்தனன் இருந்தனன் நெருப்பு:உண் டான் என, வினைத்திறம் யாது.இனி விளைப்பது? இன்னமும் எனைத்துள கேட்பன துன்பம் யான்?’ என்றான்.

(கம்பன்-2:161) 'நினைந்தனன் இருந்தனன் என்ற சொற்களுக்கு இருந்து நினைத்துப் பார்த்துப் பிறகு உணர்ந்தான் என்பதே பொருள். -