பக்கம்:தம்பியர் இருவர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2.2 தம்பியர் இருவர்

இவ்வாறு பரதன் கூறவும் கைகேயி யாதொன்றும் கூறாமல் இருந்துவிட்டாள். அவள் வாய் மூடி இருப்பதைக் கண்ட பரதனுடைய ஐயம் பலபடியாய் விரிந்துவிட்டது. அந்தக் காலத்தில் ஒருவன் வனத்தை நண்ணினான் என்றால், அது தக்க காரணம் பற்றியதாகவே இருக்கும். வேட்டை கருதியும், தவம் செய்வான் வேண்டியும் மக்கள் வனம் செல்வதுண்டு. ஆனால், இராமன் தான் மட்டுஞ் செல்லாமல் தையலாளையும் உடன்கொண்டு சென்றான் என்று கூறப்பெறுவதால், இவை இரண்டும் காரணமாய் இருத்தற்கில்லை. ஒரு வேளை வானப் பிரஸ்த’ நிலையில் மனைவியுடன் வனஞ்சார்ந்தான் என்று கூறவும் இராம னுடைய வயது இடந்தரவில்லை. பின்னர் ஏன் வனஞ் சென்றான் இராமன்?

சமுதாயத்திற்குத் தீ ங் கு இழைத்தவர்களையே காட்டுக்கு ஒட்டுதல் மரபு. சூரிய குலத்தில் தோன்றிய ‘அசமஞ்சன்’ என்பான், மக்களுக்குத் தீங்கு புரிந்தமையின், காட்டிற்கு ஒட்டப்பட்டான். அவ்வாறு ஒருவேளை இருக்குமோ என்று கருதிய பரதன், தீங்கு இழைத்த தாலா?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வது போலக் கைகேயியைக் கேட்கிறான். நல்ல நிலையிலிருப் பாரும் தெய்வக் குற்றம் செய்தமையின் அறிவு கலங்கிப் பித்துற்றுக் காடு செல்வதும் உண்டு. அவ்வாறிருக்குமோ என்று ஐயுறுகிறான் பரதன். நல்ல நிலையில் இருந்த நளன், தருமன் போன்றார் அகங்காரம் காரணமாகச் சூதாடி நாட்டை இழந்து விதியினால் காட்டிற்குச் செலுத்தப்பட்டனர். அவ்வாறு இருக்குமோ என்றும் ஐயுற்றான்; பரதன் ஒரு வினாடி இவ்வாறு நினைத்தாலும் உடனே மனம் மாறிவிட்டான்; அடுத்த கணம் யாரைப் பற்றி இவ்வாறு நினைத்துவிட்டோம் தவறாக!” என்று நினைத்து, அவ்வாறு தான் நினைத்த செயலுக்கே வருந்து கிறான். இத்தகைய தீமைகளை இராமனா செய்வான்? கனவிலுங் கருத முடியாததொன்று! ஒரு வேளை இராமன்