பக்கம்:தம்பியர் இருவர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩器色 தம்பியர் இருவர்

பரதன் என்ற தசரதன் மைந்தன், இராமன் என்ற தசரதன் மைந்தன் காடு சென்றமைக்காக வருந்தவில்லை; கைகேயி மைந்தன், கோசலை மைந்தனுக்காகவும் வருந்த வில்லை; அயோத்தி நாட்டின் குடிமகன் ஒருவன் அந் நாட்டின் வருங்கால அரசன் காடு சென்று விட்டானே நாட்டை ஆளாமல் என்று அதற்காகவும் வருந்தவில்லை. பின்னர் யார் இப்பொழுது அரற்றுகிறவன்? பரதன் என்ற மனிதன், பண்பாட்டில் நிறைந்த ஒரு மனிதன், அரற்று கிறான். ஏன்? தன் அண்ணனும், தாயும், தந்தையும், உயிரும் என்று மதித்த ஒருவனை இழந்ததால் துடிக் கிறான். உயிரினும் மேம்பட்ட கொள்கையாக, கொள்கை யினும் மேம்பட்ட குறிக்கோளாக அன்றோ இராமனை அவன் கருதி வாழ்ந்தான்! அன்பைச் சொரிதற்குரிய தெய்வமாகக் கொண்ட ஒரு பொருளை இழந்தால் யார் தான் வருந்தாமல் இருக்க முடியும்? எனவே வருந்தி னான்.

பின்னர் ஏன் சினம்? ஆம்! பொருளை இயற்கையாக இழந்திருந்தால் வருத்தம் மட்டும் ஏற்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு அல்லாமல் செயற்கையாக மற் றொருவர் சூழ்ச்சி காரணமாக இழந்திருந்தால் அச் சூழ்ச்சி யாளர்மேல் சினந் தோன்றாமல் வேறு என்ன தோன்றும்? தான் இல்லாத சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து, அப் பொருள் மிகுதியும் தன்னால் போற்றப்படுவது என்பதை நன்கு அறிந்த ஒருவரே அதனைப் போக்கிவிட்டால், போக்கினவர்மேல் சினம் தோன்றாதா? அதிலும், அவ்வாறு போக்கினவர் தன்னுடைய நம்பிக்கைக்கு மிகவும் பாத்திர மானவர் என்றால், அத்துயரம் எத்துணைப் பெரிதாகப் படரும்? ஐயோ! பரதன் கைகேயியை எவ்வளவு நம்பியிருந் தான்! அவளுக்கு இராமன்மேல் அன்பு இல்லாமலிருப் பினும், பெற்றெடுத்த பரதன்மேல் கூடவா அன்பு இல்லை? உண்மையான அன்பு இருந்திருப்பின், அவ்வன்பு அப் பரதனுக்கு விருப்பம் இல்லாத ஒன்றைச் செய்ய அவளைத்