பக்கம்:தம்பியர் இருவர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 38 தம்பியர் இருவர்

'பிறந்தான் ஆண்டான் என்னும் இதனால்

பெறலாமே ( 21 79)

"மாயேன் வன்பழி' ( 21 83)

'யான்உயிர் பேணிப் பழிபூனேன்’’ f 3184)

'தீராது ஒன்றானும் பழி' 2 : 84)

'என்றே னுந்தான் என்பழி மாயும் இடம் உண்டோ?’’

(2.185)

என்பன பரதன் பரிவுரை.

ஏறத்தாழ அவனுடைய பேச்சிற் பெரும்பகுதி பழி, பற்றியதாகவே உள்ளது. பழிக்கு இத்துணைத் துாரம் நாண வேண்டுமாயின், அவனுடைய பண்பாட்டை நினைக்க நினைக்க வியப்பே மேலிடுகிறது. இதில் மேலும் வியப்பு என்னை எனில், உண்மையில் பழிக்கு உரிய செயல் ஒன்றையும் பரதன் செய்யவில்லை. பழிச்செயலைச் செய்தவள் கைகேயி. பரதனுக்கு அதில் பங்கு சிறிதும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். தசரதன், இராமன், கைகேயி என்ற மூவரும் நன்கு அறிந்ததொன்றே இச்செய்தி. கோசலையும், இலக்குவனும் பரதனுக்கும் இதில் பங்கு உண்டோ!' என்று ஐயுற்றதுண்டு. ஆனால், இறுதியில் அவ்விருவரும் கழிவிரக்கம் காட்டும் அளவிற்கு உண்மை உணர்ந்துவிட்டனர். -

எனவே, ஒருவரும் நினையாமல் இருக்கவும் தனக்குப் பெரும்பழி வந்து விட்டதாகப் பரதன் ஏன் இவ்வளவு தூரம் கலங்க வேண்டும்? அவனது மனச்சான்றே அவன் குற்றமற்றவன் என்பதை நன்கு வெளியிடுமே! அவ்வாறு இருக்க, ஏன் கவலை? உலகத்தார் தன்மேல் (குறை இன்மையை எடுத்துக் கூறுவர் என்பதை அவன் அறி யானா? நன்றாக அறிவான். தான் செய்யாத செயலுக்குத் தன்மேல் யாரும் பழி கூறமாட்டார் என்னும் மெய்ம் மையை அறிந்ததாலேதான் உயிரை வைத்திருப்பதாக