பக்கம்:தம்பியர் இருவர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 0. தம்பியர் இருவர்

பரதனும் அமைச்சரும்

பரதனைக் தேற்றிய வசிட்டன் அவனை அரசை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறான். வசிட்டனுடைய இவ்வேண்டுகோளைக் கேட்ட பரதன், நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் அஞ்சினன் அயர்த்தனன் அருவிக் கண்ணின னாய் அவையோரை நோக்கிப் பேசுகிறான். 'மூவுலகுக்கும் முதல்வனானவன் மூத்தவனாய் இருக்க, யான் மகுடம் சூடுதல் அறமா?’ என்கிறான்; இதனை யடுத்து அவையோருக்கும் ஓர் இக்கட்டான நிலையை உண்டாக்குகிறான்.

'அடைவரும் கொடுமைஎன் அன்னை செய்கையை

கடைவரும் தன்மைநீர் கன்று இது என்றலின் இடைவரும் காலம்ஈண்டு இரண்டு நீத்து.இது கடைவரும் தீநெறிக் கலியின் ஆட்சியோ?”

(கம்பன்-2258)

கொடுமை செய்து வரம் பெற்ற என்னுடைய அன்னையின் செயலை நேர்மையானது என்று நம்பினால்தான் அதன் அடுத்தபடியான பட்டத்தையும் எனக்குத் தரமுடியும். நீவிர் என் அன்னை செய்தது சரி என்று ஒப்புகிறீரா? அவ் வாறு ஒப்பினால் இது கலிகாலத்தின் கொடுமையை தவிர, வேறு ஒன்றும் அன்று, என்கிறான். மேலும், அரசவையில் பலகாலம் இருந்து அனுபவம் பெற்ற நீவிர் யாரேனும் பண்டுதொட்டு இன்று வரை மூத்தவன் இருக்க இளையவன் அரசு புரிந்த வரலாறு கேட்டதுண்டா? உண்டாயின் கூறுக, என்கிறான். இவை இரண்டு வினாக்கட்கும் அவையோர் எவ்விதமான விடையைத் தருதல் கூடும்? தாய் செய்தது முறை அன்று என்று கூறுவாரேல், பரதனைப் பார்த்துப் பட்டத்தை ஏற்றுக்கொள் என்று கூறவும் இயலாது. எனவே, அவர்கள் யாது விடை கூற லாம் என்று ஆராய்கின்ற நேரத்தில் பரதனே தன் கருத். தைப் பேசிவிடுகிறான். -