பக்கம்:தம்பியர் இருவர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 44 தம்பியர் இருவர்

'குணம்காடிக் குற்றமும் நாடி அவற்றுள் \

மிகைநாடி மிக்க கொளல்.’ (திரு. 504) என்ற குறளைக் கனவிலும் மறத்தலாகாது. இக்குறளுக்குச் சரியான பொருள் காண்டலும் சற்றுக் கடினமானதே. ஏன் எனில், மிகை’ என்ற சொல் அவரவர் விருப்பம் போலப் பொருள்படக் கூடிய ஒப்புநோக்குச் சொல்லாகும். மிகை என்றால் என்ன? அளவால் மிகையையும், பண்பால் மிகையையும் மிகை’ என்றே கூறுகிறோம். ஒருவரிடம் எண்ணிக்கையால் பலவான நல்லியல்புகளும் இருத்தல் கூடும். ஆனால், அவை அனைத்தையும் போக்கிவிடக்கூடிய ஒரு தீய பண்பு இருக்கலாம். இந்நிலையில் குறளுக்கு (அளவால்) மிகை நாடி என்று பொருள் கோடல் தவறாக முடிந்துவிடும். பல சிறு சிறு தீய குணங்கள் இருந்தும் அவை அனைத்தையும் போக்கக் கூடிய ஒரு பெரிய நற்குணம் இருத்தலும் கூடுமன்றோ? இவை அனைத் தையும் ஆய்ந்து குறளுக்கு உரை காண்டல் வேண்டும். இக்கருத்தை மனத்துட்கொண்டு பார்த்தால் தசரதன் கைகேயி என்பவர்களிடம் சிறு சிறு தவறுகளாகப் பல இருத்தலைக் காணலாம். ஆனால், இராவணனிடம் பிறர் மனை நய’க்கின்ற ஒரே ஒரு தவறுதான் காண்டல் கூடும். என்றாலும் என்ன? பல சிறு தவறுகள் இருந்தும் தசரதனை நல்லவன் என்றும் ஒரே தவறு இருந்தும் இராவணனை மிகவும் தீயவன் என்றும் கூறுகிறோம். எனவே, தவறும் இருவகைப்படும்; ஒன்று, அளவால் கணக்கிடப்படுவது; ஏனையது தன்மையால் கணக்கிடப்படுவது.

பரதனுடைய பண்பாட்டை ஆயும் பொழுது இவற்றை மனத்துட்கொண்டுதான் ஆய வேண்டும். பரதன் என்ற ஒரு மனிதன் தோன்றுகிறான். அதுவும் நீண்டநாள் மகப் பேறில்லாத மன்னன் ஒருவனுக்கு இரண்டாம் மைந் தனாய்ப் பிறக்கிறான்; கல்வி கேள்விகளில் நல்ல பயிற்சி பெறுகிறான்; பெற்ற தாயிடம் அல்லாமல் மாற்றாந் தாயிடம் வளர்கிறான்; தன் மூத்தவனாகிய இராம