பக்கம்:தம்பியர் இருவர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ¢ 8 தம்பியர் இருவர்

பரதன் தன்னுடைய உணர்ச்சி எதுவாயினும் அதனை மிகுதியும் வெளிக்காட்டக் கூடியவன் அல்லன் என்பதும் அறிய முடிகிறது. பரதன் திருமணம் முடிந்து அயோத்தி வந்தவுடன் தசரதன் அவனைக் கேகயநாடு செல்க' என்று. பணித்துவிட்டான். அந்த ஆணையை உடன் சிரமேற் கொண்டு பரதன் கேகய நாடு சென்றுவிட்டான். இவ்வளவு விரைவாகத் தந்தை ஏன் தன்னை அனுப்ப வேண்டும் என்பது பற்றி அவன் நினைக்கவில்லை. ஒரு வேளை நினைத்திருந்தாலும் அதனை எப்பொழுதும் வெளியிட வில்லை. மேலும், கேகய நாட்டில் உறையும் பொழுதும் அவனுடைய எண்ணம் முழுவதும் அயோத்தியிலேதான் இருந்தது என்றும் கருத இடமுண்டு. அயோத்தியிலிருந்து வந்த தூதர்களைக் கண்டவுடன், தமையனுடைய நலத் தைப் பற்றிக் கேட்பதும், அயோத்தி மீளலாம்என்று கூறின வுடன் நாளும் நேரமும் கூடக் குறிக்காமல் புறப்பட்டுச் சென்றதும் இராமனிடம் அவனுக்கு இருந்த அளவு மிஞ்சிய காதலையே அறிவுறுத்துகின்றன. இத்துணைக்காதல் இருந்தும் இராமனிடம் செல்ல வேண்டுமென்று அவன் வாய் விட்டு வெளியிற்கூறவே இல்லை. அயோத்தி வந்த பொழுதும் தந்தையைக் காண வேண்டும் என்ற விருப்பம் அளவு மிஞ்சி இருப்பினும் ஒருவரையும் அதுபற்றிக் கேட்டு அவன் ஒரு விதமான குழப்பமும் நடத்தாமல் இருந்து விட்டதும் அவனுடைய அடக்கத்தையே அறிவுறுத்தும். கணவன் இறந்ததைப் பற்றிக் கூற வந்த தாய் யாரோ மூன்றாம் மனிதன் இறந்ததைப் போகிற போக்கில் கூறுவது போலக் குறிப்பிடவே, பரதன் அவள்மேல் கடுங்கோபம் கொள்கிறான். என்றாலும், உன்னை அல்லாமல் வேறு யார் இத்தகைய சொற்கள் கூறக்கூடும்? என்று மட்டுந் தான் கூறுகிறானே தவிர, வேறு ஒரு சொல்லுங் கூற. வில்லை. இவ்வாறு கூறும்பொழுது அவனுடைய துயரமும் சினமும் மீதுார்ந்து இருப்பினும், உணர்ச்சிகளை அடக்கிப் பழகியவன் ஆகலின், வேறு ஒரு சொல்லுங் கூறவில்லை. கோசலை தன் மீது ஐயங்கொண்டாள் என்பதை அறிந்த